நடிகர் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
கடந்த 2004ம் ஆண்டு ’தளபதி’ விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ’கில்லி’. தரணி இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெனிஃபர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த கில்லி படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து சக்கைப்போடு போட்ட “ஒக்கடு” படத்தின் ரீமேக் ஆகும். கில்லி படத்தில் கபடி வீரராக விஜய் நடித்திருந்தார். 
இப்படம் இன்று டிவியில் ஒளிபரப்பினாலும் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைசி வரை சேனலை மாற்றாமல் பார்க்கக்கூடிய அளவுக்கு ரீமேக் படம் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் இடம் பெற்ற “அப்படிப்போடு” பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இந்நிலையில் கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

“கூடிய சீக்கிரம் #கில்லி படத்த re release பண்ண போறோம்” 😍🙏🏻Theater experience வெறித்தனமா இருக்க போகுது 🥵💯🔥#தமிழகவெற்றிகழகம் #TVK #GOAT #TheGreatestOfAllTime #ThalapathyVijay #Ghilli pic.twitter.com/sSybmiReJE
— தளபதி ரிஷி ツ (@ThalapathiRISHI) February 11, 2024

இதனை வித்யாசாகர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.  அதில், ”கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளுக்கு கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் அப்போது பிஸியான வேலைகள் இருந்ததால் செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக விஜய் சாரிடம் நான் பேசினேன்” எனவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஏற்கனவே விஜய் அரசியல் பணிகளுக்காக சினிமாவில் இருந்து விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால் சோகமாக இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: Jayam Ravi: கோயில்ல வச்சி விஜய் அரசியல் பத்தியா கேப்பீங்க.. கடுப்பான நடிகர் ஜெயம் ரவி!

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Устали сливать бюджет на рекламу которая приносит временный эффект? Инвестируйте в органическую выдачу через улучшение поведенческих факторов. Наш сервис генерирует…

  2. Идеальное решение для современного интерьера — [url=https://www.dizaynerskiye-stoly.ru/]купить элитный стол[/url], которые подчеркнут ваш вкус и статус. Для поддержания внешнего вида дизайнерских…

  3. Если вы хотите надежно оградить свой участок, обратите внимание на [url=https://www.zabor-dlya-dachi-iz-proflista.ru/]металлический забор из профлиста на дачу цена[/url] — это оптимальное…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed