மாணவர்களுடன் ராகுல்

இன்று சென்னை வந்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியவர் ‘மோடியின் கேம் ஓவர்’ எனப் பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மாணவர்களுடன் ராகுல்

ராகுல் பேசியதாவது, “ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும் போதும் உங்களிடமிருந்து புதிதாக ஒன்றைக் கற்றுச் செல்கிறேன். விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும், கேள்வி கேட்கும் ஞானமும்தான் மாணவர்களின் பலம். கேள்வி கேட்காமல் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியாது.

மோடி அரசு தமிழ் கலாசாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது. மோடியும் அமித் ஷாவும் புதிய கல்விக் கொள்கையின் வழியாக மொழியை உங்கள் மீது திணிக்க நினைக்கின்றனர்.

தமிழ்நாட்டின் 70 சதவிகித மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் மூலம் மோடியும் அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை பல்கலைக்கழகங்களுக்குள் நுழைக்க நினைக்கின்றனர்.

மோடி, ஜனநாயகத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்துகிறார். மக்களின் குரலை ஒடுக்குகிறார். டெல்லியில் இன்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். பாஜக தங்களின் குண்டர்களைக் களமிறக்கி மாணவர்களைத் தாக்குகிறது.

Ban Neet பதாகையுடன் ராகுல்
Ban Neet பதாகையுடன் ராகுல்

15 ஆண்டுகளாக நடந்துவரும் டிராமா முடிந்துவிட்டது. அவருடைய கேம் ஓவர் என்பது மோடிக்கு இன்னும் புரியவில்லை” என்றார்.

நிகழ்வில் நீட் அனிதாவின் அண்ணன் மணிரத்னமும் கலந்துகொண்டு ராகுலுடன் உரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ”நீட் தேர்வை ரத்து செய்ய 100% உறுதுணையாக நிற்பேன்” எனக் கூறினார். மேலும், மணிரத்னம் நடத்தி வரும் Ban Neet கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்தும் இட்டார்.

Source link


Latest News

View All

  1. Запой создает серьезную нагрузку на сердце, сосуды, печень, почки, мозг и нервную систему. Чем дольше пациент употребляет спиртное, тем выше…

  2. Спектр услуг позволяет подобрать программу под конкретного пациента. В одном случае достаточно консультации врача и детоксикации, в другом необходимо длительное…

  3. Постоянное употребление алкоголя в больших дозах вызывает физическую зависимость, поэтому становится трудно отказаться от алкоголя без медицинской помощи. Систематическое пьянство…

  4. Быстро собираем первичную информацию, оцениваем риски и предлагаем подходящий вариант обращения. Подробнее – [url=https://narkologicheskaya-klinika-moskva15-3.ru/]besplatnaya-narkologicheskaya-klinika-moskva[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed