தாராபுரம், மதுராந்தகம்: "தவெக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்" - செங்கோட்டையன் உறுதி | tvk minister sengottaiyan about dharapuram madhurandhagam by election results

ஈரோடு மாவட்டத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கான நலத்திட்டங்களை இந்த அரசு தொய்வின்றி செய்து வருவதால், மக்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க நூற்றுக்கு இருநூறு சதவீதம் என்கிற மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக அமையப் போகிறது.

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த இடைத்தேர்தல் களம் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவுள்ளது. எந்த அளவுக்கு என்றால், வருங்காலத்தில் வரக்கூடிய அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தி.மு.க- வோ அல்லது அ.தி.மு.க-வோ போட்டியிடவே யோசிக்கும் அளவிற்கும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கும் இந்தத் தேர்தலில் த.வெ.க-வின் வெற்றி அசுரத்தனமாக இருக்கும்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்” என்றார்.

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed