கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் வரி வருவாயை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒரு சதவிகிதக் குறைவும், செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி வருமானம் ஐந்து சதவீதமும் குறைந்து போயிருக்கிறது. அதே நேரத்தில் பல மாநிலங்களின் வருவாய் பன்மடங்கு பெருகியுள்ளது. இனி அக்டோபர், நவம்பர் மாதங்களில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
இது இப்படியே போனால், மிகப்பெரிய அளவுக்குப் பணப்புழக்கம் குறைந்து, பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். பலருக்கும் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புண்டு.
படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது, எங்கிருந்து தட்டியெழுப்புவது? தலை எங்கே இருக்கிறது, கால் பகுதி எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஓரு ஆரோக்கியசாமியும் ஒரு விஷ்ணு பிரசாத்தும் அரசை நடத்த முற்பட்டால், இதுபோன்ற விளைவுகள்தானே ஏற்படும்?
ஐந்து மாதங்களுக்கு முன்பு வீசிய “விஜய் அலை’, இப்போது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓர் இடைத்தேர்தலுக்கு வீதி வீதியாக ஒரு முதலமைச்சர் செல்ல வேண்டிய நிலை உருவாவதிலிருந்தே, அன்று உருவானது ஒரு தற்காலிகமானது என்பதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதான ‘வெறுப்பு’ மட்டும்தான் என்பதும் தெரிகிறது.
மதுராந்தகமும் தாராபுரமும் புகட்டும் பாடத்தால் புரிந்து கொள்வார்களா, அல்லது சுய விழிப்புணர்வு கொள்வார்களா?
தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்து வருகிறது என்றாலே, பிற வருவாய்களும் தானாகவே குறையும் என்பதுதான் கணக்கில் கொள்ள வேண்டும். மீண்டும் அரசுக்கு கடன் சுமை அதிகரிக்கும். முந்தைய ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுக் காலத்தில் வாங்கிய கடனைக் காட்டிலும், இவர்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படப் போகும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரளயங்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

























Came here from a search and stayed for the side links because they were that interesting, and a stop at…