புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி உயர்வு அடிப்படையில் எஸ்.பியான சுப்பிரமணியன், காரைக்காலில் பணியாற்றினார்.
அப்போது, `புதுச்சேரி காவல்துறையில் காவலராகப் பணிபுரியும் தன்னுடைய மகளுக்கு எஸ்.பி சுப்பிரமணியன் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்தார்.
அதனால் என் மகள் தற்கொலைக்கு முயற்சித்தார். அதற்குக் காரணமான எஸ்.பி சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஒரு பெண் காவலரின் தாய் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதையடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதேசமயம் எஸ்.பி சுப்பிரமணியனும் புதுச்சேரிக்கு மாற்றலானார். அதையடுத்து தான் கொடுத்த புகாரின் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, பெண் காவலரின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்.பி மீதான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பிறகும் புதுச்சேரி காவல்துறை விசாரணை எதையும் மேற்கொள்ளாததால், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் பெண் காவலரின் தாய். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி லட்சுமிநாராயணன், “இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

























Picked this for my morning read because the topic seemed worth the time, and a look at wildcovecommerceatelier confirmed the…