ஈரான் போர் தொடங்கி ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கப்பட்டதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் பெரும்பாலும் இருக்கிறது. அவ்வப்போது உச்சத்தை வேறு தொட்டிருக்கிறது.
ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை)…
WTI கச்சா எண்ணெய் – ஒரு பீப்பாவிற்கு 67 டாலர் வர்த்தகமானது.
Brent கச்சா எண்ணெய் – ஒரு பீப்பாவிற்கு 72 டாலருக்கு வர்த்தகமானது.
இப்போது WTI கச்சா எண்ணெயின் விலை 94 டாலர்… Brent கச்சா எண்ணெயின் விலை 107 டாலர்.
இந்தக் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் மூடப்பட்டதே காரணம்.
ஹார்முஸ் நீர்ச்சந்தி இன்னும் ஈரானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதை முடக்கி தான் ஈரான் போரில் உலக நாடுகளுக்கு நெருக்கடிக் கொடுத்து வருகிறது ஈரான்.
ஆனால், அமெரிக்காவோ ஹார்முஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் இந்தக் கூற்றைக் கேலி செய்வது போல, ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஹார்முஸ் நீர்ச்சந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமெரிக்காவின் பொய்ப் பிரசார மையம் கூறுகிறது.
ஆனால் சந்தையிலோ, போருக்கு முந்தைய விலையை விட 35 டாலரும், தற்போதைய நிலவரப்படி 50 டாலரும் கூடுதல் பிரீமியம் விலையில்தான் வர்த்தகம் நடக்கிறது.இதிலிருந்து என்ன தெரிகிறது.
ஒன்று, சர்வதேச எண்ணெய் சந்தை முட்டாள்தனமாக இருக்க வேண்டும். இன்னொன்று, அமெரிக்காவின் பொய்க் கதைகளை உருவாக்கும் மிஷின் கட்டுக்கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா சொல்வதை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு ஹார்முஸில் இலவசமாக டாலர்களை அள்ளிக் கொடுக்கும் எந்திரம் காத்துக்கொண்டிருக்கிறது. போய் அள்ளிக் கொள்ளுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

























Now planning to share the link with a small group of readers I trust, and a look at cloverstonecollective suggested…