மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின் கணக்கீட்டாளர் பணியை தனியாருக்குத் தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகத் தனத்தைத் தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டிருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக, தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும், நடத்துனர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்க தவெக இலக்கு நிர்ணயித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை உடனடியாகக் கைவிடுவதோடு, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

























Honestly enjoyed every minute spent here, that is not something I say lightly, and a look at hazelbrookvendorfoundry confirmed I…