பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் ‘ஷைத்தான்’. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஜோதிகா. ஷைத்தான் திரைப்படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
 

நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் ஷைத்தான் படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு  ஷைத்தானின் எழுச்சியை காணும் நேரம் இது. மார்ச் 8ஆம் தேதி திரையரங்கில் படம் வெளியாகிறது” என்ற குறிப்புடன் வெளியிட்டுள்ளார்.
 

#Shaitaan is coming for you. Taking over cinemas on 8th March 2024.@ActorMadhavan #Jyotika @imjankibodiwala #JyotiDeshpande @KumarMangat @AbhishekPathakk #VikasBahl @jiostudios @ADFFilms @PanoramaMovies @PanoramaMusic_ pic.twitter.com/MIaL2qqTuc
— Ajay Devgn (@ajaydevgn) January 19, 2024

‘ஷைத்தான்’ படத்தின் போஸ்டரில் பில்லி சூனிய உருவ பொம்மைகளை இடம்பெற்றுள்ள நிலையில், அமானுஷ்ய திரைப்பட பாணியில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அஜய் தேவ்கன் அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :
இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜய் தேவ்கன் மைதான் மற்றும் ஆரோ மே கஹா தம் தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ரெய்டு 2 , டி டி பியார் டி சீக்வெல், சிங்கம் அகெய்ன் மற்றும் சன் ஆஃப் சர்தார் 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க உள்ளார். அஜய் தேவ்கன் மிகவும் பிஸியான ஷெட்யூல் பாலோ செய்து வருகிறார். 

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed