Powerlifting: சர்வதேச போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 17 வயது மதுரா கர்


தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் மதுரா

மதுரா கர் சர்வதேச அளவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். 2024-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற அவர், அடுத்த ஆண்டும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். 2025ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பிலும் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

மேலும், சீனாவில் நடைபெற்ற ஆசிய பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் மதுரா கர் வென்றுள்ளார். இந்த வெற்றிகள் அவரது சர்வதேச போட்டி அனுபவத்தையும் தொடர்ந்து மேம்பட்டு வரும் திறமையையும் காட்டுகின்றன.

உலக அரங்கில் புதிய இலக்கு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் மதுரா வெற்றி பெற்றார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக பதக்கங்களைக் குவித்து வரும் அவர், இளம் வயதிலேயே பவர்லிஃப்ட்டிங் உலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார்.

பள்ளிப் படிப்புடன் இணைந்து கடுமையான பயிற்சியிலும் கவனம் செலுத்தி வரும் மதுரா, எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் பயணித்து வருகிறார்.

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 17 வயதிலேயே உலக சாம்பியன் பட்டத்தை வென்று நான்கு தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ள மதுரா கர், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டில் இந்தியாவின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. СПА бутик-отель https://www.ostrova-hotel.ru «Острова» в Сочи — элитный отдых, комфортные номера, SPA, рестораны и высокий уровень сервиса. На официальном сайте…

  2. Санаторий «Заполярье» https://www.zapolarye.ru официальный сайт с подробной информацией о программах отдыха и оздоровления. Выбирайте номер, знакомьтесь с лечебными процедурами, услугами,…

  3. Оформил вишлист на новоселье — в итоге получили именно ту технику, что планировали. Here is my web blog: https://syrnyjdedushka.ru/author-profile/luigishy014272/

  4. Купить запчасти https://atv-parts.ru для квадроциклов и снегоходов для регулярного обслуживания и восстановления техники. В каталоге представлены комплектующие для двигателя, трансмиссии,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed