"தெம்பு இருந்தால் திராணி இருந்தால் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிய விஜய்.!"- ஆர்.எஸ். பாரதி சவால்| r.s bharathi about cm vijay speech in tn assembly


சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேடினேன், தேடினேன் ஒன்றுமே கிடைக்கவில்லை ஆகவே பழைய பஞ்சாகத்தைப் பாடுவோம் என்பதைப் போல முதல்வர் விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இவர் பிறப்பதற்கு முன்பு கொடுக்கபட்ட ஒரு புகாரை எடுத்துக்கொண்டு இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 100, 110 நாட்களில் நடைபெற்றிருக்கக்கூடிய கொலைகள், பாலியல் குற்றங்கள், திருட்டுகள் போன்றவற்றை ஆதாரத்தோடு குறிப்பிட்டு குற்றம்சாட்டினார்.

அதேபோல எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எடப்பாடி அவர்களும், மற்ற கட்சி உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்லுவதற்கு அருகதை இல்லாமல், யோகிதை இல்லாமல் தைரியம் இல்லாமல் துணிச்சல் இல்லாமல் பேசியிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed