லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்... ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்! | CM Vijay postponse his UK vist after call from Governor


வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த `வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேற்கொண்டு வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார் முதல்வர் விஜய்.

ஐரோப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர்களைச் சந்தித்து பேசவும் நிகழ்ச்சி நிரல்கள் தயாராகின. ‘டிப்ளமேட்டிக்’ பாஸ்போர்ட் நடைமுறைகளுக்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் சென்றுவந்தார் முதல்வர். இந்தச் சூழலில், ஆளுநர் அர்லேக்கரிடமிருந்து வந்த போன்காலைத் தொடர்ந்து, தனது லண்டன் பயணத்தை முதல்வர் தள்ளிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அர்லேகர், விஜய்

அர்லேகர், விஜய்

அதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ப்ரிக்ஸ்’ உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார். 13-ம் தேதி டெல்லியில் மாநாடு நிறைவுற்றவுடன் சென்னை வர திட்டமிட்டிருக்கும் அன்வர் இப்ராஹிம், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறார். த.வெ.க அரசு அமைந்தவுடன், முதல்வர் விஜய்க்கு முதலில் வாழ்த்துச் சொல்லிய வெளிநாட்டு தலைவர் அன்வர் இப்ராஹிம்தான்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Для стройки: калькулятор бруса — объём и цена считает кубатуру и количество штук по размерам постройки, затем стоимость по цене…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed