TNPL 2026: Trichy Grand Cholas Collapse for 99, Kovai Kings Enter Final | TNPL 2026: முதல் 3 பந்தில் 3 விக்கெட்... சுருண்ட திருச்சி! இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்த கோவை!


வந்தார் சென்றார்…திருச்சிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

184 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே கே. ராஜ்குமார் டக் அவுட் ஆக, அடுத்த பந்தில் ஷ்யாம் சுந்தரும் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் ஜெகதீசன் கௌசிக் விக்கெட்டையும் வீழ்த்திய கே. தீபன் லிங்கேஷ், தனது முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

அடுத்தடுத்து விழுந்த இந்த மூன்று விக்கெட்டுகளால் நிலைகுலைந்த திருச்சி அணியால், அந்த அதிர்ச்சியிலிருந்து கடைசி வரை மீள முடியவில்லை

திருச்சி கேப்டன் சுரேஷ் குமார் மட்டும் 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசி போராடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தன. மறுப்பும் கோவை பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தார்த் 4 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியில் 15.4 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது திருச்சி. இதன்மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோவை இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை கே. தீபன் லிங்கேஷ் பெற்றார்.

திருச்சியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த கோவை, இப்போது கோப்பைக்காக மதுரை பேந்தர்ஸை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 28-ம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில், இந்த சீசனின் சாம்பியன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Онлайн-платформа https://inventure.com.ua/uk про инвестиции, финансовые рынки и экономику Украины и мира. Актуальные новости, профессиональная аналитика, обзоры активов, инвестиционные стратегии и…

  2. Хочешь заказать еду? https://kejtering-moskva-s-dostavkoj.ru фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей, пожеланий заказчика и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed