'எங்களை விட்டுருங்க' - 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE

[ad_1]

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடாவில் உள்ள ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது.

இதில் அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற பகுதிகள் அடங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடுமையான பாதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்காவில் ஆயுத தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் அமெரிக்காவே இத்தாக்குதலை நிறுத்தி இருக்கிறது.

மேற்கொண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டால் எங்கள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரானிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டுள்ளது.

3 பில்லியன் டாலர் விடுவிப்பு

அதோடு அந்நாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு இருந்த ஈரானுக்குச் சொந்தமான 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நாடு உடனே விடுவித்துள்ளது. விடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த 3 பில்லியன் டாலர்களையும் தனி விமானத்தில் ஏற்றி சென்று ஈரானிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறது.

யு.ஏ.இ வழங்கிய விமானங்கள்

அபுதாபியிலிருந்து கிளம்பிய விமானம் நேராக டெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்திற்குப் பறந்து சென்று 3 பில்லியன் டாலர் தொகையைக் கொடுத்துவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் திரும்பி விட்டது.

இதே போன்று ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு இருந்த ஈரானுக்குச் சொந்தமான 2 டன் தங்கத்தையும் தனி விமானங்களில் எடுத்துச்சென்று ஈரானிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறது.

15 விமானங்களைக் கொடுத்த யு.ஏ.இ

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் ஈரானில் பயணிகள் விமானம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எனவே விமான பயணிகள் சேவையை மீண்டும் தொடங்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரானுக்கு உதவி செய்துள்ளது.

முடக்கப்பட்டுள்ள சொத்துகள் விடுவிக்கப்பட்டதோடு, ஈரான் விமான நிறுவனத்திற்கு 15 பயன்படுத்தப்பட்ட பயணிகள் விமானங்களை விற்பனை செய்யவும் ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட போயிங் விமானம் ஒன்று ஈரானுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

இது தவிர மேலும் மூன்று போயிங் விமானம் உட்பட 5 விமானங்கள் ஈரானுக்கு விற்கப்பட்டுள்ளன. ஏர்பஸ் விமானங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரானுக்குக் கொடுத்து இருக்கிறது. ஏற்கனவே 15 விமானங்களை ஈரானுக்குக் கொடுத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேலும் 14 விமானங்களைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 30 விமானங்கள் சேதம் அடைந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைக் காப்பாற்றவும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் தாக்குதல் நடந்தால் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஈரானுக்குச் சொந்தமான சொத்துக்களை அந்நாட்டிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திரும்ப கொடுத்து வருகிறது.

25 சதவீத ஆளில்லா விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரானுடனான போரின்போது, ​​அமெரிக்கா தனது மொத்த ஆளில்லா விமானங்களில் ஏறக்குறைய கால் பங்கான, குறைந்தது 45 MQ-9 ரீப்பர் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் விமானங்களை இழந்துள்ளது.

இதன் மூலம் அந்நாட்டிற்கு 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது அமெரிக்காவிடம் சுமார் 185 ‘ரீப்பர்’ (Reaper) ட்ரோன்கள் இருந்தன. இவற்றில் 165 விமானப்படையிடமும், 20 கடற்படைப் பிரிவிடமும் (Marine Corps) இருந்தன. பொதுவாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் செயல்படும் கடற்படைப் பிரிவின் ட்ரோன்கள் எவையும் இதில் இழக்கப்படவில்லை.

அதன் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களைப் பொறுத்து, ஒரு ரீப்பரின் விலை தோராயமாக 30 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர் வரை ஆகும். இதில் செயற்கைக்கோள் இணைப்புகள் மற்றும் ஆயுதங்கள் சேர்க்கப்படும்போது, ​​விலை கணிசமாக அதிகரிக்கும்.

அமெரிக்காவிடம் ஏற்கனவே ஆயுத இருப்பு குறைந்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில், இந்த ட்ரோன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தரையில் இருந்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளின் கையிருப்பும் தீர்ந்துவிட்டதாகக் கடந்த வாரம் பல அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed