Chennai oi-Hema Vandhana
Updated: Friday, August 21, 2026, 12:15 [IST]
சென்னை: சர்க்கரைக்கு டிமாண்டு வந்துவிட்டது.. குறிப்பாக இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நேரத்தில், சர்க்கரை விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்தே எகிற ஆரம்பித்து விட்டது. இனிமேல்தான் பண்டிகைகள் ஒவ்வொன்றாக வர உள்ள நிலையில், இது நுகர்வோருக்கு கவலையையும் தந்துவிட்டது. இந்த விலை உயர்வைச சமாளிக்கவும், மார்க்கெட்டில் போதுமான அளவு சர்க்கரை இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு சூப்பரான ஒரு முடிவை எடுத்துள்ளது. அதை பற்றி இங்கே பார்ப்போம். 2026-27 சர்க்கரை உற்பத்தி பருவம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆலைகளில் சர்க்கரை இருப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. 2025-26 பருவத்தில் எத்தனால் உற்பத்திக்காக அதிகப்படியான கரும்பு பயன்படுத்தப்பட்டதால், சர்க்கரை உற்பத்தி சுமார் 2.79 கோடி டன்னாக மட்டுமே இருந்தது. முந்தைய ஆண்டின் துவக்கத்தில் இருந்த ஸ்டாக், நடப்பு ஆண்டின் உற்பத்தி என மொத்தம் 3.26 கோடி டன் சர்க்கரை இருக்கிறது. ஆனாலும் உள்நாட்டு நுகர்வு மொத்தம் 2.80 கோடி டன்னாக உள்ளது. சுங்க வரி இல்லாமல் இறக்குமதி இதற்கு நடுவில், கடந்த நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 20 லட்சம் டன் சர்க்கரை சுமார் 8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதன்காரணமாக, ஸ்டாக்கில் உள்ள சர்க்கரை மேலும் குறைந்து, விலையும் அதிகமாகி விட்டது.. மராட்டியம் போன்ற முக்கிய உற்பத்தி மாநிலங்களில் சர்க்கரையின் ஆலை விலை குவிண்டாலுக்கு ரூ.5,400 முதல் ரூ.5,560 வரை உயர்ந்துள்ளதே இதற்கு சாட்சி. இந்த விலையை கட்டுப்படுத்த, அக்டோபர் 31ம் தேதி வரை 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த இறக்குமதி வாய்ப்பை பெற விரும்பும் ஆலை உரிமையாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள், ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, அக்டோபர் 15-க்குள் இறக்குமதியை முடிப்பதாக உறுதி அளிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு கொண்டு வந்துள்ள விதிகள் அதேபோல பெரிய நிறுவனங்கள் அல்லது கடைகள் சர்க்கரையை வாங்கி பதுக்கி வைக்கக் கூடாது என்பதற்காக அரசு புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, ஹோட்டல்கள், இனிப்புக் கடைகள், குளிர்பான நிறுவனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மாதத்திற்கு 10 டன்னுக்கும் அதிகமான சர்க்கரையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அவர்கள் தன்னிடம் 15 நாட்களுக்குத் தேவையான சர்க்கரையை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இந்த புதிய சட்டம் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும். விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு வராமல் தடுக்கவும், பொதுமக்கள் எளிதாக சர்க்கரை வாங்குவதற்கும் இந்த நடவடிக்கை உதவும். சர்க்கரை விலை குறையுமா? இருந்தாலும், இந்த 10 லட்சம் டன் இறக்குமதியால் சந்தையில் பெரிய அளவிலான விலை சரிவு ஏற்படாது என்று தொழில் துறை வல்லுநர்கள் அலர்ட் செய்கிறார்கள்.. குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 500 வரை மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே, சர்க்கரை விலை இன்னும் பல மடங்கு ஏறிவிடாமல் இருக்க, மத்திய அரசு எடுத்துள்ள ஒரு தடுப்பு நடவடிக்கை இது என்றே சொல்லலாம்.. நுகர்வோருக்கு முழுமையான விலைக் குறைப்பு இல்லை என்றாலும், விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்க இந்த முடிவு அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. English summary
Central Government Big Move as Sugar Price Hits Rs 5,560.. Will Prices Fall?
gambling in canada statistics, united statesn bingo rules and canadian poker, or canadian roulette winning numbers Feel free to visit…
























