காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தொழில் வளாகங்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் முன்னணி உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலைகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் விரிவாக்கப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயிண்ட் கோபைன் தொழிற்சாலையை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், உலகத் தரத்திலான கண்ணாடி உற்பத்தி வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளது. விரிவாக்கப் பணிகள் மற்றும் உற்பத்தி வசதிகள் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் முதலமைச்சர் விளக்கம் கேட்டறிந்தார்.
டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன தொழிற்சாலை
அதனைத் தொடர்ந்து, ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள் (Daimler India Commercial Vehicles) நிறுவனத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் பாரத்பென்ஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் வர்த்தக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பஸ் சேஸிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
நிசான் நிறுவனத்திலும் பார்வை
தொழில் ஆய்வு பயணத்தின் ஒரு பகுதியாக, நிசான் கார் உற்பத்தி நிறுவனத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு, உற்பத்தி செயல்பாடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான விவரங்களை அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
இந்த ஆய்வின்போது முதலமைச்சர் விஜய் வயலட் கலர் சட்டை அணிந்திருந்தார். வழக்கமாக, வெள்ளை நிற சட்டையோ அல்லது கருப்பு நிற சட்டையோ அணிந்திருப்பார். இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வயலட் கலர் சட்டை அணிந்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும், வயலட் கலர் சட்டை அணிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தவெகவினர் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
முக்கிய அம்சங்கள்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் வளாகங்களை முதலமைச்சர் விஜய் ஆய்வு.
- செயிண்ட் கோபைன் கண்ணாடி உற்பத்தி வளாகத்தை பார்வையிட்டார்.
- டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன தொழிற்சாலையில் ஆய்வு.
- நிசான் கார் உற்பத்தி நிறுவனத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
- தொழில் முதலீடுகள் மற்றும் உற்பத்தி விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை.
#CMVijay #Kanchipuram #Sriperumbudur #SaintGobain #DaimlerIndia #BharatBenz #MercedesBenz #NissanIndia #TamilNadu #IndustrialDevelopment #BreakingNews #ACTPNews





















