அந்தப் பதிவில் அவர், “மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பைக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே!
மதிப்பிற்குரிய முதல்வர் என்னிடம், ‘இந்த அரசு அமைஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா’ என்றார்.
ஆனால், அப்படி கிடையாது. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்.
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு, அதான் தளபதி.
எனக்கு இது வரலாற்றுப் பதிவு. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள்!” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.






















