இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்  - Kumudam

நேற்றிரவு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் படியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குலை நடத்திவருக்கிறது. இதையடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அமலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஈரான் தாக்குதலில் ஈடுபடாமல் இருந்த நிலையில், லெபானான் மீதான தாக்குதலைக் கண்டித்து, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. 

குறிப்பாக, வடக்கு இஸ்ரேல் மீது 11 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக IDF தெரிவித்துள்ளது. இந்த மோதல் பிராந்திய பதற்றத்தை அதிகரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வெளியின் பகுதிகள் முழுவதையும் மூடியிருக்கின்றன.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு கடுமையான மற்றும் சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலை அடுத்த ஒரு வாரம் தொடர்ந்து தாக்குவோம் என ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed