News18

Last Updated:

15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது.

News18
News18

15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, 72 சிக்ஸர் விளாசி ஒரு சீசனின் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். புகழ்பெற்ற அனுபவமிக்க சர்வதேச வீரர்கள் பலர் விளையாடிய இத்தொடரில் அதிக ரன்கள் விளாசியவராகவும் 776 ரன்களுடன் சூர்யவன்ஷியே முதலிடம் பெற்றார்.

அதேபோல இன்றைய நவீன கிரிக்கெட்டில் முக்கியமானதாக கருதப்படும் ஸ்ட்ரைக் ரேட் பாயிண்டுகளிலும் சுமார் 237 புள்ளிகளுடன் இவரே முதலிடத்தை பிடித்தார். இப்படி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இவர் குறித்து ஆச்சரியப் பார்வை பார்த்துவரும் நிலையில் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த 3 மாத ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி இவரது அசாதாரணமான செயல்திறனுக்கு என்னென்ன அம்சங்கள் காரணங்களான அமைந்துள்ளன என முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், விளையாட்டு, உளவியல் மற்றும் மேலாண்மை வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விரிவான ஆய்வுக் கட்டுரை, உலகின் முன்னணி ஆய்விதழ்களுக்கு அனுப்பப்படும்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கு மனநலம் மற்றும் பயிற்சிசார் கொள்கைகளை வடிவமைக்க உதவும் வகையில், பிசிசிஐயிடம் நேரடியாக இது பகிர்ந்துகொள்ளப்படும் என்று இந்திய மேலாண் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் செய்திகள்/விளையாட்டு/

Vaibhav Sooryavanshi | பள்ளியில் படிக்கும் வயதில்… ஆராய்ச்சி பாடமாய் மாறிய கிரிக்கெட் உலகின் ‘அதிசயப் புயல்’ வைபவ் சூர்யவன்ஷி…!

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed