கொளத்தூர் சுடுகாடாகும் என்று திமுக தொண்டர் பேசிய வீடியோவை பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
2001 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என மு.கருணாநிதி வசைபாடினார். இன்று திரு. ஸ்டாலின்
அவர்களை தோற்கடித்த காரணத்திற்காக, ஒரு படி மேலே சென்று கொளத்தூர் மக்களை செருப்பால் அடிப்போம் என்றும், கொளத்தூர் தொகுதி இனி சுடுகாடாக மாறும் என்றும் தி.மு.க-வினர் மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தற்குறி நாடு என வசைபாடுவது இவர்களின் பாசிச புத்தியை காட்டுகிறது. மக்களின் தீர்ப்பை ஏற்க துப்பிலாத தி.மு.க-விற்கு ஜனநாயகத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. இதுதான் தி.மு.க-வின் உண்மையான முகமா?
2001 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போது தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என மு.கருணாநிதி வசைபாடினார். இன்று திரு.@mkstalin அவர்களை தோற்கடித்த காரணத்திற்காக, ஒரு படி மேலே சென்று கொளத்தூர் மக்களை செருப்பால் அடிப்போம் என்றும், கொளத்தூர் தொகுதி இனி சுடுகாடாக மாறும் என்றும்… pic.twitter.com/nd0p1PRgRT
— Dr.SG Suryah (@SuryahSG) May 6, 2026
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.






















