பெண்கள் பாதுகாப்புக்காக, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன், கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக் கூடாது என பரிந்துரை செய்யப்பட்டது.
ஒரு பெண், ஒரு ஆண் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற விரும்பினால், அவர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. முடி திருத்தும் கடைகளில், பெண்களுக்கு பெண்களே முடி திருத்த வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டது.
பெண்களை ஏற்றிச் செல்லும் பள்ளிப் பேருந்துகளில், ஒரு பெண் ஊழியர் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. பெண்களை கெட்ட தொடுதலில் இருந்து பாதுகாக்கவும், ஆண்களின் தவறான எண்ணங்களை தடுக்கவும் இந்த பரிந்துரைகள் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
பயிற்சி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரைகளை அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இது தொடர்பாக சட்டங்களை உருவாக்குமாறு மகளிர் ஆணையம், மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…