மலையாள நடிகர்கள் சங்கமாக அம்மா அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்த விசாரித்த ஹேமா கமிட்டி, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருந்தது.
அந்த அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் நேரடியாக குவிந்தன. நடிகைகள் நேரடியாகவே பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர்.
மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த பிரபல நடிகர் சித்திக் மீதும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து முகேஷ், ஜெயசூர்யா இடைவேளை பாபு, மணியன் பிள்ளை ராஜு என முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டதை தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு அதிரடியாக கலைக்கப்பட்டது.
தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், தற்போது மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு, தற்காலிக கமிட்டி செயல்பட்டு வருகிறது.
அடுத்த வருடம் ஜூனில் பொதுக்குழு கூடி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், தலைவர் பதவியை மீண்டும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மலையாள திரைத்துறையினரிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






















Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/