உலக முதலீடுகளை ஈட்டுவதற்கு வரும் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை திரும்பும் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலகம் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்
சென்னையில் இருந்து 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார்.
28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2 தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் முக்கிய முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.
29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இன்வெஸ்டர் கன்க்ளேவ் கலந்தாய்வு, 31ஆம் தேதி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.
செப்டம்பர் 2ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிக்காகோ செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் 12ஆம் தேதி வரை முக்கிய நிறுவன முதலீட்டர்களை சந்திக்க உள்ளார்.
பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் தமிழக முதலமைச்சர் சந்தித்து பேச உள்ளார்.
செப்டம்பர் 7ஆம் தேதி வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு என்று தமிழகத் தொழில் துறை தகவல் தெரிவித்துள்ளது.

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…