கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது.
தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும் BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை தொடங்கியுள்ளது. முன்னணி நடிகரான அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை இயக்கிய இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் மேற்கொள்கிறார்.
படத்தின் தொடக்க விழா
பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாகக் கோலோச்சும் பாபி பாலச்சந்திரன் BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். முன்னதாக இந்நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில், ஹாரர் திரைப்படமான “டிமாண்டி காலனி 2” படமும், இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், நடிகர்கள் வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும், ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியஇன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…