இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஏப்ரல் 4) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

05.04.2024 முதல் 07.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024 மற்றும் 09.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் வரும் 7-ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° – 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 33° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று (ஏப்ரல் 3) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…