Thug Life: அரவிந்த் சாமி முதல் டோவினோ தாமஸ் வரை! தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிப்பது யார்?
அரவிந்த் சாமி அல்லது மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகிய இருவரில் ஒருவர் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தக் லைஃப்
படத்தில் இருந்து விலகிய துல்கர், ஜெயம் ரவி
தக் லைஃப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சைபீரியாவில் தொடங்கியது. இதில் கமல்ஹாசன் , நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியவர்களின் காட்சிகள் படமாக்கப் பட இருந்தன. இதற்கிடைப்பட்ட காலத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடப் போவதில்லை என்றும் திமுக சார்பாக மாநிலங்களவையில் கமலின் ம.நீ.ம கட்சிக்கும் ஒரு சீட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார் கமல்ஹாசன்.
இதனால் தக் லைஃப் படத்தில் அவர் நடிக்க இருந்த காட்சிகளில் தாமதம் ஏற்பட்டது. தனது அடுத்தடுத்தப் படங்களுக்கு கால் ஷீட் கொடுத்திருந்த துல்கர் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தக் லைஃப் படத்தில் நிலை குறித்து பெரும் குழப்பம் எழுந்தது.
துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசன்
இதனைத் தொடர்ந்து தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான்  நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த எஸ்.டி ஆர் 48 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப் பட்டு சிம்பு இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஜெயம் ரவிக்கு பதில் யார்
ஏற்கனவே ஜெயம் ரவியின் ஒரு சில காட்சிகள் எடுக்கப் பட்டுவிட்டதாக அவருக்கு பதிலாக இன்னொரு நடிகரை மாற்றுவது தொடர்ந்து பெரும் விவாதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு விவாதித்து வருகிறது.
இதில் நடிகர் அரவிந்த் சாமி அல்லது மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகிய இருவரை தேர்வு செய்துள்ளது படக்குழு. இதில் ஒருவர் ஜெயம் ரவிக்கும் பதிலாக தக் லைஃப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு விரைவில்  வெளியிடும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Source link