cinema headlines today march 26th tamil cinema news today rip seshu thug life kamal simbu | Cinema Headlines: தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்த சிம்பு; காலமான காமெடி நடிகர் சேஷூ



Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…

பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

Shruti Hassan: உங்களுக்கு கேக்க வேற கேள்வியே இல்லையா.. திருமணத்தைப் பற்றி கேட்டதும் முகம் மாறிய ஷ்ருதிஹாசன்

நிகழ்ச்சியில் நடிகை ஷ்ருதி ஹாசனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’ என்பதுதான். பாடலை பாடி அதை இயக்கவும் செய்து அதுபற்றிய கேள்விகளை கேட்க ஆர்வமாக காத்திருந்த ஷ்ருதி ஹாசன் இந்த கேள்வியால் கோபத்திற்கு உச்சத்திற்கு சென்றதை அவரது முகத்தை பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம் . ஆனால் நாகரிகம் கருதி அவர் தனது முகத்தில் சிரிப்பை வைத்துக்கொண்டு “ சீரியஸாவா..என்னுடைய முதல் கேள்வியே இதுதானா? என்னுடைய பாட்டைப் பற்றி கேட்பதற்கு வேறு எதுவும் இல்லையா?  என்றார். மேலும் படிக்க

Suriya – Prithviraj: “வாழ்வில் ஒருமுறைதான் கிடைக்கும் வாய்ப்பு..” நடிகர் ப்ரித்விராஜை புகழ்ந்த சூர்யா!

நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ப்ரித்விராஜ் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா “ உயிர்பிழைக்கும் போராட்டத்தின் கதையைச் சொல்ல 14 ஆண்டுகால உழைப்பு. இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும். நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் ப்ளெஸ்ஸி மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

Thug Life STR: வாவ்.. தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்த சிம்பு.. 2ஆம் முறை மணிரத்னத்துடன் கூட்டணி?

கமலின் தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் ‘எஸ்.டி.ஆர் 48’ படத்தில் நடிக்க இருந்தார் சிலம்பரசன். தற்போது தக் லைஃப் படத்தில் அவர் இணைந்துள்ளதாகவும், இதனால் எஸ்.டி.ஆர் 48 படம் இன்னும் சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க

Kanguva: என்னது கங்குவா டீசரில் வந்தது நிஜப் புலியா? சைலண்டாக சம்பவம் செய்த கங்குவா கேங்!

கங்குவா டீசரில் சூர்யா புலியை எதிர்கொள்ளும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியில் கிராஃபிக்ஸ் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்தன. இந்த காட்சி முழுக்க கிராஃபிக்ஸ் இல்லை என்றும் படத்திற்காக நிஜப் புலி ஒன்று பயன்படுத்தப் பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க

மேலும் காண

Source link