தமிழ்நாடு:

தமிழ்நாடு அரசு விருதுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு; திராவிட சிந்தனையாளார் சு.ப. வீரபாண்டியனுக்கு பெரியார் விருது அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; தமிழ்நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்.

சென்னையில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்; ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்

கிளாம்பாக்க பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்; தென்மாவட்டங்களுக்கான பேருந்துகளில் புறப்பட்ட மக்கள்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு; பேருந்து வசதிகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.

புழல் தனியார் குடோனில் பயங்கர தீவிபத்து; 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராட்டம்

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழா; எந்தநேரமும் மக்களைப் பற்றி சிந்தப்பதாக முதலமைச்சர் உருக்கம்

பிரதமர் மோடியை காமராஜருடன் ஒப்பிட்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை; அதிமுக கே.பி. முனுசாமி கண்டனம்; தமிழ்நாடு உள்ளிட்ட பிறமாநிலங்கள் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிரதமர் வராதது ஏன் எனவும் கேள்வி

பெருந்துறை சிப்காட்டில் விதிகளை மீறி ரசாயனக் கழிவு வெளியேற்றம்; மேலும் ஒரு ஆலைக்கு மின்சாரத்தைத் துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து; பள்ளிகளில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுருத்தல்

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்; வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய மாணவ – மாணவியர்; கலைநிகழ்ச்சிகள் ஆடல் பாடலுடன் உற்சாக நடனம்

சீனாவில் ரூபாய் 100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் கிடைத்ததாகக் கூறி ரூபாய் மூன்று கோடி மோசடி செய்த நபரை சென்னையில் கைது செயத போலீசார்

இந்தியா

நெருங்கி வரும் மக்களவைத் தேர்தல்; காணொலி வாயிலாக நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் – ஒருங்கிணைப்பாளர் தேர்வு; நாடு தழுவிய பரப்புரையை மேற்கொள்வது குறித்து விவாதிக்க வாய்ப்பு

மும்பையில் உள்ள நாட்டின் மிக நீளமான கடல் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சேப்ரீஸ் – நவசேனா இடையிலான பயணநேரம் 20 நிமிடங்களாக குறையும்

உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12வது இடத்திற்கு முன்னேற்றம்; 100 பில்லியன் டாலரைக் கடந்த சொத்துமதிப்பு

உலகம்

நண்டு நடையை முன்மாதிரியாகக் கொண்டு ஹிண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள புதியவகை கார் அறிமுகம்; பார்க்கிங் பிரச்னையைத் தடுக்க புதிய முயற்சி ; 360 கோணமும் திரும்பும் என தகவல்

பெரு நாட்டில் 24 வயதான ஆபாசபட நடிகை தானியா ஃபீல்ட்ஸ் பிணமாக மீட்பு; சமீபத்தில் இவர் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எதிராக ஏமனில் போராட்டம்; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

அமெரிக்காவின் ஸ்காட் கவுண்டியில் கடும் பனிப்பொழிவு; வாகனங்களை இயக்குவதில் சிக்கல்; சாலைகளில் தேங்கியுள்ள பனியை நீக்க ஊழியர்கள் முயற்சி

ரஷ்யாவில் மைனஸ் 52 டிகிரியில் நடைபெற்ற மாரத்தான்; இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 38 பேர் பங்கேற்பு

விளையாட்டு

ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்ப்பு

தமிழ்நாடு கைப்பந்து லீக்கின் இறுதிப் போட்டியில் வென்ற சென்னை ராக் ஸ்டார்ஸ் அணி; கடலூர் அணி இரண்டாவது இடம் பிடித்தது

நாளை நடைபெறுகின்றது இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20; வீரர்கள் தீவிர பயிற்சி

Previous Post
Next Post
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Every day is a new beginning