`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை'- உச்ச நீதிமன்றம் கண்டனம்!


உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணையின்போது, மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அநியாய லாபக் கொள்ளையைச் சுட்டிக்காட்டி, இந்திய உச்ச நீதிமன்றம் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக, வழக்கறிஞர் கிஷன் சந்த் ஜெயின் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் இந்த அதிரடி கருத்துகளைத் தெரிவித்தனர். விசாரணையின் போது, புற்றுநோய் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்து ஒன்று சில்லறை விற்பனையாளருக்கு  ₹2,700-க்கு வழங்கப்பட்ட நிலையில், அதன் உச்சபட்ச சில்லறை விலை  ₹27,000 என அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது குறித்துத் கருத்து தெரிவித்த நீதிபதி சந்தீப் மேத்தா, “உற்பத்தியாளர் ₹2,700-க்கு வழங்கும் ஒரு மருந்துக்கு, ₹27,000 என எம்.ஆர்.பி அச்சிட்டு 10 மடங்கு கூடுதல் விலைக்கு விற்பது பகல் கொள்ளை தவிர வேறு என்ன? இது நோயாளிகளிடம் நடத்தப்படும் அப்பட்டமான சுரண்டல். உயிர்காக்கும் மருந்துகளை வாங்குவதற்காக ஏழை மக்கள் தங்களின் வீடுகளையும், நகைகளையும் விற்கும் சூழல் நிலவுகிறது. இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசு அதிகாரிகளும் அமைப்புகளும் அமைதி காப்பது ஏன்?” எனச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

மனுதாரர் தரப்பில், “மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை (DPCO 2013)-ன் கீழ் பட்டியல் 1-ல் உள்ள சுமார் 1,000 மருந்துக் கூட்டமைப்புகளுக்கு மட்டுமே தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கிறது.

ஆனால் சந்தையில் உள்ள 82% பட்டியல் இல்லாத  மருந்துகளின் ஆரம்ப விலையைக் கட்டுப்படுத்த எவ்வித விதிகளும் இல்லை. இதனால் நிறுவனங்கள் தன்னிச்சையாகப் பிரமாண்ட லாப வரம்பை நிர்ணயித்துக் கொள்ள முடிகிறது” எனக் குற்றம்சாட்டப்பட்டது.

“கார்ப்பரேட் மருத்துவமனைகள் இத்தகைய அதிகபட்ச எம்.ஆர்.பி விலையிலேயே நோயாளிகளுக்கு மருந்துகளை விற்றுப் பெருலாபம் ஈட்டுகின்றன. மேலும் “ஆயுஷ்மான் பாரத்’ போன்ற அரசு காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைகளிலும், இத்தகைய உயர்த்தப்பட்ட எம்.ஆர்.பி கணக்கிலேயே அரசுப் பணம் ரீஇம்பர்ஸ்  செய்யப்படுவதால், இது மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் மிகப்பெரிய முறைகேடு” என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Узнаем темой https://volga.news/805142/article/chem-frontalnyj-pogruzchik-otlichaetsya-ot-drugoj-skladskoj-i-stroitelnoj-tehniki.html и его основными характеристиками. Такие машины используются при выполнении земляных работ. Главным элементом техники выступает рабочий ковш,…

  2. Изучим особенностями https://volga.news/805142/article/chem-frontalnyj-pogruzchik-otlichaetsya-ot-drugoj-skladskoj-i-stroitelnoj-tehniki.html и принципом работы. Погрузчики данного типа применяются на производственных площадках. Главным элементом техники служит ковш, который позволяет…

  3. Узнаем особенностями https://volga.news/805142/article/chem-frontalnyj-pogruzchik-otlichaetsya-ot-drugoj-skladskoj-i-stroitelnoj-tehniki.html и особенностями эксплуатации. Погрузчики данного типа применяются на строительных объектах. Основным рабочим органом является ковш, который позволяет…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed