Month: February 2024

  • top news India today abp nadu morning top India news February 1 2024 know full details
    top news India today abp nadu morning top India news February 1 2024 know full details



    இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை

    இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும். மேலும் படிக்க..

    2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமயிலான அரசு இன்று தனது இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. மேலும் படிக்க..

    பேடிஎம்-க்கு பேரிடி! மக்கள் பயன்படுத்த தடையா? ரிசர்வ் வங்கியின் அதிரடி கட்டுப்பாடுகள்

    கடந்த சில ஆண்டுகளாகவே, டிஜிட்டல் இணைய சேவைகள் மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேடிஎம், ஜிபே உள்ளிட்ட சேவைகளைதான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். நட்சத்திர விடுதிகள் தொடங்கி சிறிய கடைகள் வரை, இவைதான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழலில், ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம்-இல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும் பண பரிமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு, இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

    ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல்.. யாத்திரையில் விஷமிகள் செய்த காரியம்.. நடந்தது என்ன?

    இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகாரை தொடர்ந்து இன்று மேற்குவங்கம் சென்றடைந்தது. மேற்குவங்கம் மாநிலம் மால்டாவில் நுழைந்த வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் வாகனத்திற்குள் ராகுல் காந்தி பயணிக்கவில்லை. வெளியே இருந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனத்தின் பின்புற ஜன்னல் முற்றிலுமாக உடைந்துவிட்டது. ஆனால், ராகுல் காந்திக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. மேலும் படிக்க..
     

    மேலும் காண

    Source link

  • Silambarasan fame STR48 making its First Twinkle on 2nd February announced Raaj kamal |  STR48 First Twinkle: STR48 படப்பிடிப்புக்கு ரெடியான சிம்பு
    Silambarasan fame STR48 making its First Twinkle on 2nd February announced Raaj kamal |  STR48 First Twinkle: STR48 படப்பிடிப்புக்கு ரெடியான சிம்பு


    STR48 First Twinkle: சிம்பு நடிக்கும் STR48 படப்பிடிப்பு நாளை மறுநாள் தொடங்கும் என கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது.
    தமிழ் சினிமாவில் தனக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் சிலம்பரன். டி.ராஜேந்திரனின் மகனான இவர், சிறுவயதில் இருந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் இயக்கம், நடனம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என ஆல்ரவுண்டராக வலம் வரும் சிம்புவுக்கு ஃபேன் பேஸ் அதிகம்.
    கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சிம்வுக்கு கம்பேக் கொடுத்தது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம். இந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்ததால், அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் பணியாற்றினார். இந்தப் படமும் வெற்றிப்பெற்றதால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
     
    அடுத்ததாக கடந்த ஆண்டு சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ‘பத்து தல’ படம் அவரை பிளாக்பஸ்டர் ஹீரோவாகக் கொண்டாட வைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக தனது 48வது படத்தில் நடிக்க சிம்பு கமிட்டானார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்ற தகவல் சிம்பு மீண்டும் ஒரு நல்ல படப்பை தருவார் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.
     
    “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, சிம்புவுக்கு பக்காவான ஸ்கிரிப்டை எழுதியிருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் STR48 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
     

    பீரியட் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  STR48  படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. 
     

     

    மேலும் காண

    Source link

  • Vegetables price list february 1st 2024 chennai koyambedu market
    Vegetables price list february 1st 2024 chennai koyambedu market


    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.24 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
    ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இன்றைய நாளில் (பிப்ரவரி 1) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     
     

      காய்கறிகள் (கிலோவில்) 
      முதல் ரகம் 
       இரண்டாம் ரகம் 
     மூன்றாம் ரகம் 

    வெங்காயம் 
    24 ரூபாய்
    20 ரூபாய்
        16 ரூபாய்

    தக்காளி 
    24 ரூபாய் 
    20 ரூபாய்
          10 ரூபாய்

    நவீன் தக்காளி
    30 ரூபாய்
     
     

    உருளை  
    30 ரூபாய்
    22 ரூபாய்
          18 ரூபாய்

    ஊட்டி கேரட்
    60 ரூபாய்
    50 ரூபாய்
         40 ரூபாய்

    சின்ன வெங்காயம்
    35 ரூபாய்
    30 ரூபாய்
         20 ரூபாய்

    பெங்களூர் கேரட் 
    35 ரூபாய்
    30 ரூபாய்
           –

    பீன்ஸ் 
    25 ரூபாய்
    20 ரூபாய்
           –

    ஊட்டி பீட்ரூட் 
    50 ரூபாய்
    40 ரூபாய்
              

    கர்நாடகா பீட்ரூட் 
    27 ரூபாய்
    25 ரூபாய்
           –

    சவ் சவ் 
    16 ரூபாய்
     15 ரூபாய் 
           – 

    முள்ளங்கி 
    30 ரூபாய்
    25 ரூபாய் 
           – 

    முட்டை கோஸ் 
    15 ரூபாய்
     13 ரூபாய்
           –

    வெண்டைக்காய் 
    35 ரூபாய்
    30 ரூபாய்
           –

    உஜாலா கத்திரிக்காய்
    20 ரூபாய்
    15 ரூபாய்
           –

    வரி கத்திரி  
    13 ரூபாய்
     10 ரூபாய்
           – 

    காராமணி
    50 ரூபாய்
    40 ரூபாய்
     

    பாகற்காய் 
    35  ரூபாய்
    30 ரூபாய்
           – 

    புடலங்காய்
    30 ரூபாய்
    25 ரூபாய்
           – 

    சுரைக்காய்
    25 ரூபாய்
    17 ரூபாய்
          –

    சேனைக்கிழங்கு
    52 ரூபாய்
    50 ரூபாய்
          –

    முருங்கைக்காய்
    90 ரூபாய்
    80 ரூபாய்
           –

    சேமங்கிழங்கு
    45 ரூபாய்
    42 ரூபாய்
     

    காலிபிளவர்
    20 ரூபாய்
    15 ரூபாய்
          –

    பச்சை மிளகாய் 
    45 ரூபாய்
    30 ரூபாய்
          –

    அவரைக்காய்
    26 ரூபாய்
    25 ரூபாய்
          –

    பச்சைகுடைமிளகாய் 
    40 ரூபாய்
    35 ரூபாய்
          –

    வண்ண குடை மிளகாய்
    80 ரூபாய்
     
     

    மாங்காய் 
    130 ரூபாய் 
    120 ரூபாய்
     

    வெள்ளரிக்காய் 
    13 ரூபாய்
    10 ரூபாய்
          –

    பட்டாணி 
    50 ரூபாய்
    40 ரூபாய்
          –

    இஞ்சி 
    100 ரூபாய்
     90 ரூபாய்
    80 ரூபாய்

    பூண்டு 
    400 ரூபாய்
    350 ரூபாய்
    180 ரூபாய்

     மஞ்சள் பூசணி 
    25 ரூபாய்
    23 ரூபாய்
            –

    வெள்ளை பூசணி 
    15 ரூபாய்

            –

    பீர்க்கங்காய்
    40 ரூபாய்
     35 ரூபாய்
           –

    எலுமிச்சை 
    60 ரூபாய்
    50 ரூபாய்
            –

    நூக்கல்
    25 ரூபாய்
    20 ரூபாய் 
            –

    கோவைக்காய் 
    25 ரூபாய்
    20 ரூபாய் 
            –

    கொத்தவரங்காய் 
    50 ரூபாய்
    45 ரூபாய்
            –

    வாழைக்காய்
    8 ரூபாய்
    7 ரூபாய்
            –

    வாழைத்தண்டு 
    35 ரூபாய்
          30 ரூபாய்
            –

    வாழைப்பூ
    25 ரூபாய்
          15 ரூபாய்
            –

    அனைத்து கீரை
    10 ரூபாய்
             –
            –

    தேங்காய் 
    33 ரூபாய்
          32 ரூபாய்
     

     

    மேலும் காண

    Source link

  • Budget 2024 finance minister nirmala sitharaman will submit in parliament today | Budget 2024: எகிறும் எதிர்பார்ப்புகள்..! வருமான வரியில் மாற்றமா?
    Budget 2024 finance minister nirmala sitharaman will submit in parliament today | Budget 2024: எகிறும் எதிர்பார்ப்புகள்..! வருமான வரியில் மாற்றமா?


    Budget 2024: 2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    இடைக்கால பட்ஜெட்:
    விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமயிலான அரசு இன்று தனது இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
    வருமான வரி உச்சவரம்பில் மாற்றமா?
    இந்த இடைக்கால பட்ஜெட்டில்,  கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. ஆனால்,   நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாக உள்ளது. அதேநேரம், தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் விதமாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், எரிபொருட்களின் விலையை குறைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்களுக்கு நன்மை பயக்கும் சில அறிவிப்புகளும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்:
    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை  முறியடிக்க உள்ளார்.
    நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர்:
    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். முன்னதாக,  இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருக்கிறார். அதாவது 1959 முதல் 1964 வரையிலான ஆட்சிக் காலத்தில்  5 முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அதோடு, 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.
     
     
     

    மேலும் காண

    Source link

  • Jay Shah, BCCI Secretary, Reappointed As Chairman Of Asian Cricket Council For 3rd Consecutive Term
    Jay Shah, BCCI Secretary, Reappointed As Chairman Of Asian Cricket Council For 3rd Consecutive Term

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில்:
    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வருடாந்திர பொதுக்கூட்டம் இந்தோனிஷியாவில் உள்ள பாலி தீவில் இன்று நடைபெற்றது. இதில் ஏசிசி தலைவராக ஜெய் ஷா  நீடிக்கும் தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா இரண்டாவது முறையாக முன்மொழிந்தார். அதனை ஏசிசி-யின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.
    ஜெய் ஷா, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு, ஏ.சி.சி. தலைவர் பொறுப்பை கடந்த 2021 ஜனவரியில் ஏற்றார். இவரது தலைமையின் கீழ் 2022ம் ஆண்டு ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட், 2023ம் ஆண்டில் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியை ஏசிசி நடத்தியது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பணியே ஆசிய கோப்பையை நடத்துவது தான். ஜெய்ஷா தலைமையில் ஆசிய கோப்பை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.  முன்னதாக, 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் தான் நடத்தப்பட இருந்தது.
    ஆனால், சில அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத காரணத்தால், பெரும்பாலான போட்டிகள் இலங்கையிலும், பாகிஸ்தானில் சில போட்டிகளும் நடைபெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜெய் ஷா -விற்கு எதிர்ப்பு தெரிவித்த சூழலில் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் ஜெய் ஷாவிற்கே தங்களது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    தொடர்ச்சியாக 3 வது முறை:
    இந்நிலையில், தொடர்ச்சியாக 3 வது முறையாக ஜெய் ஷா, ஏசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஏசிசி-ன் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். விளையாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக இன்னும் ஆரம்ப நிலையில் உள்ள நாடுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆசியா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க ஏசிசி உறுதி பூண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
    மேலும் படிக்க: Viral Video: கையில் பீர்.. உற்சாக நடனம்.. இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லியின் வைரல் வீடியோ!
    மேலும் படிக்க: Ind vs Eng 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.. முறியடிக்கப்படும் சாதனை! முழு விவரம் உள்ளே!
     

    Source link

  • கச்சபேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்..! படை எடுக்கும் மக்கள்..! ஏற்பாடுகள் என்னென்ன ?
    கச்சபேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்..! படை எடுக்கும் மக்கள்..! ஏற்பாடுகள் என்னென்ன ?


    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
     
    கோவில் நகரம் காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகரம், சிவக்காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என இரண்டு பகுதிகளாக  உள்ளது. இந்த காஞ்சி மாநகரில்,  எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் ஒரு கோவில் கோபுரத்தை பார்த்து விட முடியும். காஞ்சிபுரம் முழுவதும்  கோவில்களால் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரத்திற்கு “கோவில் நகரம் “பெயரும் உள்ளது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் காஞ்சிபுரம் கோவில்களை பார்க்க படையெடுத்து வருவது வழக்கமாகி உள்ளது. நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கச்சபேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆனது இன்று  நடைபெற உள்ளது. 
    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    19 ஆண்டுகள் கழித்து இன்று காலை 10 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுமார் 30,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நெல்லுக்கார தெரு வழியாக வாகனங்கள் செல்ல தடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள 11 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே பல்வேறு யாகங்கள் வளர்க்கப்பட்டு தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது
     
    விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்
     
    1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி,  
     
    2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
     
    3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்,
     
    4.தி/ள்அந்திரசன் பள்ளி,
     
    5.தி/ள்பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி,
     
    6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
     
    7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
     
    8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும்
     
    9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள்,
     
    10ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 
     
    11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி
    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  ( kanchipuram kachabeswarar temple )
    காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  விளங்கி வருகிறது.  இந்தக் கோயில் ” கச்சபேசம் ” எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில்  தனி படலமாக   அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.
     
    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  தல புராணம்
     அமிர்தம் எடுப்பதற்காக,  பாற்கடலை  கடைந்த பொழுது  மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில்,  மூழ்கிக் கொண்டிருந்தது.  இதனால் அமிர்தம் கிடைக்காமல்  பணி தடைபடும் அபாயம் இருந்தது.  இதனால் மகாவிஷ்ணு  ஆமை   அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு   உண்டாகியதாக கூறப்படுகிறது.  உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால்  சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை,  வென்டக மலையனிடையே  மறைத்து   வைத்துள்ளார் அதன் பிறகு,  தனது தவறை  உணர்ந்து. இதனை அடுத்து  திருமால்  ஆமை வடிவத்தில்  சிவனை வழிபட்டுள்ளார். 
     

    மேலும் காண

    Source link

  • 7 am headlines today 2024 1st february headlines news tamilnadu india world interim budget
    7 am headlines today 2024 1st february headlines news tamilnadu india world interim budget

    தமிழ்நாடு:

    ஸ்பெயின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு; தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக உறுதி
    சிறுபான்மை மக்களுக்கு சிஏஏ சட்டத்தால் பாதிப்பு; அதிமுக அனுமதிக்காது – எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு
    மத்திய பட்ஜெட்டில் ராணுவ தளவாட மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் கோரிக்கை.
    தமிழக அரசின் சார்பில் சென்னையில் வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகுப்புகள் நடைபெற உள்ளது.
    தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து திமுக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. 4 வது வாரிசும் தமிழகத்துக்கு வந்துவிட்டது – அண்ணாமலை
    சி.ஏ.ஏ. சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர். எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    சனாதன தர்மம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என பாட்னா உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
    சென்னையில் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த  கேஸ் சிலிண்டர், இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியா: 

    நிதியாண்டிற்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
    ராஜினாமா செய்த சில நிமிடங்களில் அமலாக்கத்துறை அதிரடி; ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது – புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு
    பொருளாதார சீர்திருத்தங்களால் நாடு சரியான திசையில் பயணிக்கிறது – புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை
    புதிய வகை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செயல்பட வாய்ப்பு குறைவு – பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்
    மேற்கு வங்கத்தில் யாத்திரையின்போது ராகுலின் கார் மீது கல் வீசி தாக்குதல்; கண்ணாடி உடைந்து நொறுங்கியது
    இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். 

    உலகம்: 

    பாகிஸ்தானில் பொது தேர்தல் வேட்பாளர் சுட்டு கொலை; உதவியாளர்கள் 4 பேர் காயம்.
    மெக்ஸிகோவில் பேருந்து – லாரி மோதி விபத்து – 19 பேர் உயிரிழப்பு.
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
    மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவியேற்பு.
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறை
    பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்

    விளையாட்டு: 

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சாதனை; முதல் முறையாக 2வது இடம் பிடித்து அசத்தல்
    ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி
    ஐசிசி டெஸ்ட் தரவரிசை – பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்
    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.
     

    Published at : 01 Feb 2024 06:59 AM (IST)

    மேலும் காண

    Source link

  • Union Budget 2024 Will an industrial park be set up in Villupuram
    Union Budget 2024 Will an industrial park be set up in Villupuram


    தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு, விழுப்புரம் மாவட்டத்துக்கு உண்டு. புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அதையொட்டி ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என 90 சதவீத அரசு அலுவலகங்களும் ஒருங்கிணைந்த மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்களின் அலைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனை கொண்டுவந்தது முன்னாள் முதலவர் கலைஞர் என்பதும் குறிப்படத்தக்கது.
    தொழில் துறை தற்போது வளரவில்லை
    விழுப்புரம், திண்டிவனத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி, திண்டிவனம் அருகே தனியார் சட்டக்கல்லூரி, அரசு, தனியார் மகளிர் கல்லூரிகள், திண்டிவனம் அருகே வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவைகளும் இம்மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கின்றன. தற்போது வானூரில் அறிவிக்கப்பட்டுள்ள ஐ.டி பார்க் பணிகள் முழுமையாக முடிந்தால், அதையொட்டி இம்மாவட்டம் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், விழுப்புரம் மாவட்டம் இந்த கால கட்டத்தில் தொழில் துறை தற்போது வளரவில்லை.
    சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை
    தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தின் நிலையை உணர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில், திண்டிவனம் அருகே பெலாகுப்பம், கொள்ளார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு வரும் தொழிற்சாலைகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாறினாலும், இப்பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 52 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் ஒருவித வெறுமை நிலவும் சூழலில் இது சற்று நம்பிக்கையைத் தருகிறது.
    தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், வெண்மணியாத்துார் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக இங்கு தொழிற்கூடங்கள் எதுவும் வரவில்லை. பெயருக்கு ஒன்றிரண்டு சிறு தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனால் எந்த ஒரு பெரிய வளர்ச்சியும் இல்லை. தற்போதுள்ள சூழலில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள், வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் நிலை தொடர்கிறது. போக்குவரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் மையமான ஒரு இடத்தில் விழுப்புரம் இருப்பதால் போக்குவரத்து வளர்ச்சி பெற்று இலகுவாக உள்ளது. உரிய திட்டமிடல்களுடன் தொழில் வளர்ச்சி பூங்காக்கள், ஐ.டி. பூங்காங்களை திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வந்தால் மேல்மருத்துவத்தூர் – திண்டிவனம் இடையே பரந்து கிடக்கும் வெற்றுப் பரப்பு வளம் கொழிக்கும் தொழிற்சார் சூழலாக மாறி விடும்.
    மேலும் இது தொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறுகையில்….
    லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடர் சம்பந்தமாக வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடத்தினேன். அப்போது, உளுந்தூா்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தொழில்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, நகைத் தொழிலாளா்களுக்கு கூலி நிர்ணயம், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு நலத் திட்டங்கள், வா்த்தகா்களுக்கு வங்கிக்கடன் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் எவையெல்லாம் மத்திய, மாநில அரசுகளின் வரம்புகளின் கீழ் வருகிறதோ, அவற்றை எல்லாம் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக ரவிக்குமார் எம்.பி. உறுதியளித்தார். இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில்பூங்கா அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
     

    மேலும் காண

    Source link

  • காலையிலேயே ஷாக்..! சிலிண்டர் விலை உயர்வு, தற்போதையை நிலவரம் என்ன?
    காலையிலேயே ஷாக்..! சிலிண்டர் விலை உயர்வு, தற்போதையை நிலவரம் என்ன?


    Gas Cylinder price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதம் இந்திய சந்தையில் கேஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிரது. அந்த வகையில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த  கேஸ் சிலிண்டர், இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாய் கருதப்படுகிறது.  அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி அதே 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
    பலிக்காத எதிர்பார்ப்பு:
    கடந்த ஜனவரி 1ம் தேதி 19 கிலோ கிராம் எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது. இதனால் ரூபாய் 1,929க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டர் விலை  ரூபாய் 1,924.50 ஆக குறைந்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 39.50 குறைப்பட்ட நிலையில், புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது வணிகர்களுக்கு புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸாக அமைந்தது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் மற்றும் தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதத்திலும் வணிக சிலிண்டர் விலை குறையும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர் எதிராக வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
     
     
     

    மேலும் காண

    Source link

  • petrol and diesel price chennai on February 1st 2024 know full details
    petrol and diesel price chennai on February 1st 2024 know full details


    Petrol Diesel Price Today, February 1: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
    பெட்ரோல், டீசல்:
    உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
    இன்றைய விலை நிலவரம்
    இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 621வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
    கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
    இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார். 
    நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 
    இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
    பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

    மேலும் காண

    Source link

  • IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!
    IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!


    <h2 class="p1"><strong>IND vs ENG 2nd Test:&nbsp;</strong></h2>
    <p class="p2">இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி<span class="s1"> 5 </span>டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது<span class="s1">. </span>கடந்த<span class="s1"> 25 </span>ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி<span class="s1"> 28 </span>ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது<span class="s1">. </span>இதன்மூலம்<span class="s1"> 1-0 </span>என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளது<span class="s1">.&nbsp; </span>முன்னதாக<span class="s1">, </span>முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்<span class="s1">. </span>அதன்படி முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில்<span class="s1"> 66 </span>பந்துகள் களத்தில் நின்று<span class="s1"> 23 </span>ரன்கள் மட்டுமே எடுத்தார்<span class="s1">. </span>அதேபோல்<span class="s1">, </span>இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறினார்<span class="s1">. </span>அதேபோல்<span class="s1">, </span>மற்றொரு வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில்<span class="s1"> 63 </span>பந்துகள் களத்தில் நின்றார்<span class="s1">. </span>ஆனல்<span class="s1">, </span>அவர் எடுத்த ரன்கள்<span class="s1"> 35 </span>மட்டுமே<span class="s1">. </span>இரண்டாவது இன்னிங்ஸில்<span class="s1"> 31 </span>பந்துகள் களத்தில் நின்று<span class="s1"> 13 </span>ரன்கள் மட்டுமே எடுத்தார்<span class="s1">.</span></p>
    <h2 class="p1"><strong>பொறுமையை கடைபிடியுங்கள்:</strong></h2>
    <p class="p2">அதேநேரம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடினார்<span class="s1">. 74 </span>பந்துகள் களத்தில் நின்ற அவர்<span class="s1"> 80 </span>ரன்களை குவித்தார்<span class="s1">. </span>ஆனால்<span class="s1">, </span>இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை<span class="s1">.&nbsp; </span>இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பிப்ரவரி<span class="s1"> 2 </span>ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள சூழலில்<span class="s1">, </span>டெஸ்ட் போட்டிகளில் குறைந்த அனுபவத்தை மட்டுமே கொண்ட இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு பொறுமையின் முக்கியத்துவத்தை விக்ரம் ரத்தோர் எடுத்துரைத்துள்ளார்<span class="s1">.</span></p>
    <p class="p2">இந்நிலையில் இன்று (ஜனவரி 31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்<span class="s1">, &ldquo;</span>எங்கள் அணியில் அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இளம் பேட்டர்கள் இருக்கின்றனர்<span class="s1">.<span class="Apple-converted-space">&nbsp; </span></span>எனவே அவர்கள் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும்<span class="s1">. </span>சுப்மன் கில்<span class="s1">, </span>யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்டர்கள் இனி வரும் போட்டிகளில் பெரிய ரன்களை எடுப்பார்கள்<span class="s1">. </span>இதை நான் உறுதியாக நம்புகிறேன்<span class="s1">. </span>அவர்கள் கடந்த போட்டியிலேயே சிறப்பாக பேட்டிங் செய்திருக்க முடியும்<span class="s1">. </span>அதற்கான திட்டங்களை அவர்கள் கொண்டு வர வேண்டும்<span class="s1">. </span>பேட்டிங் என்பது எப்போதும் ரன்களை எடுப்பதில் இருக்க வேண்டும்<span class="s1">. </span>இது அவுட் ஆகாமல் இருப்பது பற்றியது அல்ல<span class="s1">. </span>நாம் எத்தனை ரன்களை அணிக்காக பெற்றுக்கொடுத்திருக்கிறோம் என்பது பற்றியது<span class="s1">&rdquo; </span>என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் கூறினார்<span class="s1">.</span></p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="Viral Video: கையில் பீர்.. உற்சாக நடனம்.. இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லியின் வைரல் வீடியோ!" href="https://tamil.abplive.com/sports/cricket/viral-video-england-star-tom-hartley-dances-on-table-india-vas-england-test-watch-video-164748" target="_blank" rel="dofollow noopener">Viral Video: கையில் பீர்.. உற்சாக நடனம்.. இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லியின் வைரல் வீடியோ!</a></span></p>
    <p class="p2"><span class="s1">மேலும் படிக்க: <a title="Ind vs Eng 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.. முறியடிக்கப்படும் சாதனை! முழு விவரம் உள்ளே!" href="https://tamil.abplive.com/sports/cricket/from-most-centuries-to-most-wickets-records-that-can-be-broken-during-ind-vs-eng-2nd-test-visakhapatnam-164917" target="_blank" rel="dofollow noopener">Ind vs Eng 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.. முறியடிக்கப்படும் சாதனை! முழு விவரம் உள்ளே!</a></span></p>

    Source link

  • Tamil Thalaivas vs Jaipur Pink Panthers LIVE: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!
    Tamil Thalaivas vs Jaipur Pink Panthers LIVE: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!


    <p>ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 99-வது ஆட்டத்தில் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணி விளையாடிவருகிறது.&nbsp;</p>
    <h3>கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..?&nbsp;</h3>
    <p>கடந்த ஜனவரி 28ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 28-28 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தது. மறுபுறம், அதேநாளில் தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் யு மும்பா அணியை 50-34 என வீழ்த்தி வெற்றி பெற்றது.</p>
    <h2><strong>ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணிகள் நேருக்குநேர்:</strong></h2>
    <p>ப்ரோ கபடி லீ வரலாற்றில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் இதுவரை 9 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில், அதிகபட்சமாக&nbsp;ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 5 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ் தலைவாஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில்,&nbsp; இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் டிரா ஆகியுள்ளது.&nbsp;</p>
    <p>கடைசியாக இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை 25-24 என்ற கணக்கில் வீழ்த்தியது.&nbsp;</p>
    <h2><strong>புள்ளி பட்டியலில் இரு அணிகளின் தரவரிசை:</strong></h2>
    <p>16 போட்டிகளுக்குப் பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஜெய்ப்பூர் அணி 11 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் 66 புள்ளிகள் குவித்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.&nbsp;</p>
    <p>அதேசமயம், தமிழ் தலைவாஸ் 40 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 7 வெற்றியும், 9 முறை தோல்வியடைந்தாலும், கடந்த சில போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.&nbsp;</p>
    <h2><strong>இரு அணிகளின் விவரம்:&nbsp;</strong></h2>
    <p><strong>ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்</strong></p>
    <p><strong>ரைடர்கள்-</strong>&nbsp;ராகுல் சவுதாரி, அர்ஜுன் தேஷ்வால், அஜித் குமார், பவானி ராஜ்புத், தேவாங்க், நவ்நீத் ஷெராவத், அமீர் ஹொசைன் முகமதுமலேகி, ஷஷாங்க், அபிஜீத் மாலிக்.</p>
    <p><strong>டிஃபெண்டர்கள்-</strong>&nbsp;சுனில் குமார், சாகுல் குமார், அங்குஷ், சுமித், அபிஷேக் கே.எஸ்., ரேசா மிர்பாகேரி, லக்கி ஷர்மா, ஆஷிஷ், லாவிஷ்.</p>
    <p><strong>தமிழ் தலைவாஸ்</strong></p>
    <p><strong>ரைடர்ஸ்-</strong> நரேந்தர் கண்டோலா, அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின்.</p>
    <p><strong>டிஃபெண்டர்கள்-</strong>&nbsp;சாகர், சாஹில், எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிப் ரப்பானி, அர்பித் சரோஹா, அங்கித்.</p>
    <p><strong>ஆல்-ரவுண்டர்கள்-</strong>&nbsp;தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே அபிமன்யு.</p>
    <h2><strong>இன்றைய போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கற்கள்:</strong></h2>
    <p>பிகேஎல்லில் 100 டிபெண்ஸ் புள்ளிகளை எட்டுவதற்கு தமிழ் தலைவாஸின் எம்.அபிஷேக்கிற்கு இன்னும் 7 டிபெண்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.&nbsp;</p>
    <p>கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:&nbsp;</p>
    <p><strong>ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-</strong> சாஹுல் குமார், ரேசா மிர்பாகேரி, அங்குஷ் ஜூனியர், சுனில் குமார் (கேப்டன்), அபிஷேக் கே.எஸ், அர்ஜுன் தேஷ்வால், வி அஜித் குமார்.</p>
    <p><strong>தமிழ் தலைவாஸ்-</strong> சாகர் (கேப்டன்), சாஹில், மோஹித், அபிஷேக், ஹிமான்ஷு, அஜிங்க்யா பவார், நரேந்தர்.</p>
    <h2>&nbsp;</h2>

    Source link

  • Kamal sivakumar flash back photo from Thangathile Vairam movie is trending in social media
    Kamal sivakumar flash back photo from Thangathile Vairam movie is trending in social media


    திரையுலகில் அவ்வப்போது நடிகர்கள் பெண் வேடமிட்டு நடிப்பது என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரஷாந்த் என டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பெண் வேடமிட்டு ஒரு படத்திலாவது நடித்து விடுவார்கள். ஒரு சில ஹீரோக்கள் பெண் வேடங்களில் படு சூப்பராக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பொருத்தமாக அமைவதில்லை. 
     

    ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் மடிசார் உடை அணிந்து நடிகர் கமல்ஹாசன் அருகில் பெண் வேடமிட்டிருக்கும் ஒரு பிரபல நடிகரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது. அந்த ஃப்ளாஷ்பேக் புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று உற்றுநோக்கிய ரசிகர்களுக்கு கிடைத்த விடை பிரபல நடிகர் சிவகுமார். 1975ம் ஆண்டு வெளியான ‘தங்கத்திலே வைரம்’ என்ற படத்தில் கமல்ஹாசன் உடன் பெண் வேடமிட்டு ஒரு பாடலில் என்ட்ரி கொடுப்பார் நடிகர் சிவகுமார். அந்த ஸ்டில் தான் இந்த பிளாஷ் பேக் புகைப்படம். 
    எம்.ஜி.ஆர் – சிவாஜி காலகட்டம் சற்று குறைய ஆரம்பிக்க ரஜினி – கமல் படங்கள் அதிக அளவில் வெளியாகின. அந்த வகையில் 1975ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரைக் காட்டிலும் கமல் நடித்த படங்கள் அதிக அளவில் வெளியாகின. ஆரம்பக் காலகட்டத்தில் ஹீரோவாக சில படங்களில் நடித்தாலும் செகண்ட் ஹீரோவாக, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிகர் கமல் நடித்து வந்தார். 
     
    அப்படி நடிகர் கமல்ஹாசன் இரண்டாவது ஹீரோவாக நடித்த படம் தான் ‘தங்கத்திலே வைரம்’ . இப்படத்தின் மெயின் ஹீரோவாக சிவகுமார் நடிக்க அவரின் தம்பியாக கமல் நடித்திருந்தார். அண்ணன் பாடகர் என்றால் தம்பி டான்சர். அவர்களின் நாயகிகளாக ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா நடித்திருந்தனர்.
    ‘தங்கத்திலே வைரம்’ படத்தில் சிவகுமாரும் கமலும் இணைந்து ஒரு பாடலில் ஆடி இருப்பார்கள். கமல் சிறந்த டான்சர் என்பதால் அவரை மட்டும் அந்த பாடலில் ஆட வைக்கலாம் என்பது இயக்குநரின் கருத்தாக இருந்தது. ஆனால் டான்ஸ் மாஸ்டர், சிவகுமாரும் இணைந்து ஆடினால் பாடலுக்கு பொருத்தமாக இருக்கும் எனக் கூறியதால் நடிகர் சிவகுமாரும் ஒரு சில ஸ்டெப்ஸ் போட வேண்டி இருந்தது. அதனால் அண்ணன் சிவகுமாருக்கு ஏற்ற மாதிரி ஸ்டெப்ஸ் வைக்க சொல்லி டான்ஸ் மாஸ்டரிடம் தம்பி கமல் கூறியுள்ளார். அண்ணனுக்காக தன்னுடைய நடனத் திறமையை விட்டுக் கொடுத்துள்ளார் கமல். அப்போது சிவகுமார் போட்ட பெண் வேடம் தான் இந்த மடிசார் மாமி. 
    இன்றும் ஒரு முழு நீள என்டர்டெயின்மென்ட் படம் பார்க்க ஆசைப்படுபவர்கள் கே. சொர்ணம் இயக்கத்தில் வெளியான ‘தங்கத்திலே வைரம்’ படத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவான ஒரு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
       

    மேலும் காண

    Source link

  • seetha raman zee tamil january 31st today episode written update | Seetha Raman: அர்ச்சனாவை அதிர விட்ட சீதா: சுபாஷூக்கு செக்மேட்
    seetha raman zee tamil january 31st today episode written update | Seetha Raman: அர்ச்சனாவை அதிர விட்ட சீதா: சுபாஷூக்கு செக்மேட்


    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பெயிலில் வெளியே வந்த சீதா வீட்டிற்கு ராமுடன் வந்திறங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . 
    அதாவது வீட்டில் உள்ள எல்லாரும் சீதாவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்ல தயாராக, வெளியே வரும் அர்ச்சனா, ஆரத்தி தட்டை தள்ளி விட்டு  சீதா உள்ளே வரக் கூடாது, மகாவை கொன்னவளுக்கு இந்த வீட்டில் இடமில்லை” என ஆவேசப்படுகிறாள். “சீதா தான் கொலை செய்தானு நீங்க பார்த்தீங்களா” என உமா கேட்க எல்லாரும் சீதாவுக்கு ஆதராவாக நிற்க, அர்ச்சனா “இவ உள்ள வந்தா நான் வெளியே போய்டுவேன்” என்று சொல்கிறாள். 
    சீதா “மகாவை கொன்னவங்கள கண்டுபிடிக்க தான் நான் வந்திருக்கேன்” என்று மரண பயத்தை காட்டுகிறாள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அர்ச்சனா “கொன்னுடுவேன்” என்று சொல்ல, சீதா “இன்னொரு கொலையா?” என்று கேட்க, அர்ச்சனாவை திணறி விடுகிறாள். பிறகு சீதா வீட்டுக்குள் வர சுபாஷூம் அவளிடம் வம்பிழுத்து சண்டையிடுகிறான். “சேது அண்ணா கிட்ட சொல்லிடுவேன்” என்று சொல்ல “அப்படியே அந்த 300 கோடி பத்தியும் சேர்த்து சொல்லுங்க” என செக்மேட் வைக்கிறாள் சீதா. 
    பிறகு அஞ்சலி, ப்ரியா, காவியா ஆகியோர் சீதாவிடம் வம்பிழுக்க, அவர்களையும் வெளுத்து ஓட விடுகிறாள் சீதா. செல்வி கல்பனா வந்து போன விஷயத்தையும் உங்கள வீட்டுக்குள் விடக் கூடாதுனு சொன்ன விஷயத்தையும் சீதாவிடம் போட்டு உடைக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
    மேலும் படிக்க: Amy Jackson: லண்டனில் இருந்து வந்த துரையரம்மா: கோலிவுட்டில் 14 ஆண்டு பயணம்: எமி ஜாக்ஸன் பிறந்தநாள்!
    Suriya – Jyothika: உறைபனியில் உருகும் காதல்! பின்லாந்து நாட்டில் சூர்யா – ஜோதிகா: இதயங்களை அள்ளும் வீடியோ!

    மேலும் காண

    Source link