Month: February 2024

• Sun tv ethirneechal serial today episode February 24 promo

Sun tv ethirneechal serial today episode February 24 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 23) எபிசோடில் அழையா விருந்தாளியாக குணசேகரன் வீட்டுக்குள் வந்த  ஜனனியின் அப்பத்தா தன்னுடைய கலக வேலையை தொடங்கியது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு நாட்களுக்கு தங்கி இருந்து குணசேகரன் வீட்டில் பிரச்சனை கொழுந்து விட்டு எரிவதை பார்க்க வேண்டும் என இரு நாட்களுக்கு தங்கி விட்டு வருகிறேன் என சொல்லி மகளையும் பேரன்களையும் அனுப்பி வைக்கிறார்.

ஈஸ்வரியும் ஜீவானந்தமும் நீதிபதியின் ஆணையின் படி காவலில் வைத்து விசாரிக்க தீர்ப்பு வழங்கியதால் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அப்போது ஜீவானந்தம், தர்ஷினியை தேடி கண்டுபிடிப்பதற்காக கான்ஸ்டபிள் ஒருவர் அவரை தப்பித்து ஓட உதவி செய்கிறார். ஜீவானந்தம் தப்பித்து ஓடுவதை பற்றி அறிந்த போலீஸ்காரர்கள் அவரை வலைவிரித்து தேடுகிறார்கள். உதவி செய்த கான்ஸ்டபிளுக்கு ஈஸ்வரி நன்றி சொல்கிறாள்.

ரேணுகாவின் அம்மா மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என பணம் கொடுத்து அவர்களை ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக்கொள்ள சொல்கிறார். வாழ்க்கையில் முன்னேறி குணசேகரன் முகத்தில் கரியை பூச வேண்டும் என சொல்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குணசேகரனை சந்திக்க வக்கீல் வீட்டுக்கு வருகிறார். “எதுவுமே வேணாம் என தைரியமா சொன்னானுங்க இல்ல, அப்புறம் எதுக்கு அவனுங்க பேர்ல சொத்து. எல்லாத்தையும் என்னோட பேர்ல எழுதி கொடுக்க சொல்லு” என விசாலாட்சி அம்மவிடம் சொல்லி கொண்டு இருக்கிறார் குணசேகரன். அதை ஜனனியின் அப்பத்தா கேட்டு சந்தோஷப்படுகிறார். அவர்கள் பேசுவதை வாசலில் உட்கார்ந்து கேட்டு கொண்டிருந்த கதிர் உள்ளே வந்து அவரை பார்த்து முறைக்கிறான்.

ஜீவானந்தம் எஸ்கேப்பாகி விட்டது பற்றி தர்ஷினி வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள புதிய ஸ்பெஷல் ஆபீஸர் சொல்ல அதை கேட்ட ஜனனியும் ஈஸ்வரியும் அதிர்ச்சி  அடைகிறார்கள். “கடத்துனவனுக்கு உடந்தையாக இருந்தவ இங்க இருக்கும் போது அவ எதுக்கு சிஎம் செல்லுக்கு போனா?” என ஜனனியை குணசேகரன் திட்ட “அப்படினு நீங்க சொன்னா நாங்க அதை உடனே நம்பிடணுமா?” என ரேணுகா நக்கலாக கேட்கிறாள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து பதட்டத்துடன் கிளம்புகிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

ஜீவானந்தம், தர்ஷினியை கண்டுபிடித்து விடுவாரா? அல்லது அவர் எஸ்கேப்பானதால் வழக்கு வேறு பக்கம் திசை திரும்புமா? நாளுக்கு நாள் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல்.

மேலும் காண

Source link

• Chennai airport 14 kg of high-grade hydroponiccannabis seized worth Rs 7 crore – TNN | Chennai Airport: 14 கிலோ, ரூ.7 கோடி மதிப்பு.. மிகவும் உயர்தர கஞ்சா

Chennai airport 14 kg of high-grade hydroponiccannabis seized worth Rs 7 crore – TNN | Chennai Airport: 14 கிலோ, ரூ.7 கோடி மதிப்பு.. மிகவும் உயர்தர கஞ்சா

தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.7 கோடி மதிப்புடைய, 14 கிலோ உயர் ரக, “ஹைட்ரோ போனிக்” கஞ்சா இருந்த சூட்கேஸை, சென்னை விமான நிலைய கன்வயர் பெல்டில் போட்டுவிட்டு, தப்பி ஓடிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, போதைப் பொருள்கள் கடத்தல் பயணியை, சென்னை விமான நிலைய சுங்க  அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதற்கிடையே இந்த விமானத்தில் வரும் ஒரு பயணியின் சூட்கேசில், போதைப்பொருள் இருப்பதாக, பாங்காக் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்,  கண்டுபிடித்து, போதைப் பொருள் இருக்கும் சூட்கேஸில், அடையாள குறி போடப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் அந்த சூட்கேஸை கன்வேயர் பெல்ட்டில் இருந்து எடுக்கும் பயணியை பிடித்து விசாரணை நடத்தும் படியும், தாய்லாந்து நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து டெல்லியில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், வியாழக்கிழமை அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையம், வருகை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு குறிப்பிட்ட அந்த தாய் ஏர்வேஸ் விமான பயணிகளின் லக்கேஜ்கள் வரும் கன்வேயர் பெல்ட்டை  தீவிரமாக கண்காணித்தனர்.
இதற்கிடையே அந்த கன்வேயர் பெல்டில் வந்த லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரு சூட்கேசில், வெள்ளை கலர் ஷாக்பிஸ் மார்க் செய்யப்பட்டிருந்தது. அந்த சூட்கேஸை யாருமே எடுக்கவில்லை. அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளும் தங்கள் உடைமைகளை எடுத்து சென்று விட்டனர். ஆனால் அந்த ஒரு சூட்கேஸ் மட்டும், கன்வேயர் பெல்ட்டில், கேட்பாரற்று யாரும் எடுக்காமல் கிடந்தது.
எனவே சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த சூட்கேஸை எடுத்து, திறந்து பார்த்தனர். அதனுள் மிகவும் உயர்ரக கஞ்சாவான “ஹைட்ரோ போனிக்” ரக கஞ்சா இருந்தது. இது வெளிநாடுகளில் தரையில் வளராமல், தண்ணீரிலே மிதந்து கொண்டு வளரும் உயர் ரக கஞ்சா. அந்த சூட்கேசில், ஹைட்ரோ போனிக் என்ற பதப்படுத்தப்பட்ட உயரக கஞ்சா, 14 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 7 கோடி.
இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த சூட்கேசில் இருந்த டேக் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சூட்கேஸ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பயணியுடையது  என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் ரூ.7 கோடி மதிப்புடைய உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் ஆசாமி, சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் தன்னை கையும் களவுமாக பிடிக்க தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, ரூ. 7 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா போதை பொருள் அடங்கிய சூட்கேஸை எடுத்துச் செல்லாமல், சென்னை விமான நிலையத்திலேயே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார் என்று தெரியவந்தது.
இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சென்னை விமான நிலைய போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியோர்க்கும் தகவல் கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த போதை கடத்தல் பயணியை, கைது செய்ய தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் காண

Source link

• National science day Sir CV Raman history, his finding, his valuable contribution to the field of science

National science day Sir CV Raman history, his finding, his valuable contribution to the field of science

Sir CV Raman Effect: சர் சி.வி. ராமனின் வரலாறு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உலகிற்கு அவரது பங்களிப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தேசிய அறிவியல் தினம் – வரலாறு:
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் அறிவிப்பின்படி 1987ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர் சர் சந்திரசேகர வெங்கட் ராமன் பிப்ரவரி 28, 1928 அன்று ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதற்காக, அவருக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக தான்,  ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவரது  வரலாறு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உலகிற்கு சர் சி.வி. ராமனின் பங்களிப்பு குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சர் சி.வி. ராமன் வரலாறு:
திருச்சியில் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, இரா. சந்திரசேகர் எனும் ஒரு இயற்பியல் ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர் சந்திரசேகர வெங்கடராமன். விசாகப்பட்டினத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1904 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தனது B.A., பட்டப் படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்து, முதுகலை படிப்பையும் அங்கேயே தொடர்ந்தார். அனைத்துப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று,  1907 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நிதித்துறை தேர்வில் முதலிடம் பிடித்தார்.
சர் சி.வி. ராமனின் 18ஆவது வயதிலேயே அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டன் அறிவியல் இதழில் வந்தது.  கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக அரசு பணியில் சேர்ந்த அவர், அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து, பெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட அவர்,  பிறகு தானே நிறுவிய ராமன் ஆய்வுக் கழகத்தில் இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றினார். 1970ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சர் சி.வி. ராமன் இயற்கை எய்தினார். ராமன் விளைவு கோட்பாட்டிற்காக நோபல் பரிசு பெற்ற அவரை, இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. இதைதொடர்ந்து பல்வேறு பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சர் சி.வி. ராமனின் அறிவியல் கண்டுபிடிப்புகள்:
ராமன் விளைவு: ஒரு ஒளியானது ஒரு ஊடகத்தின் (பொருள்) வழியே புகுந்து செல்லும்போது சிதறி அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இந்த ஒளி சிதறலானது அந்த பொருள் கொண்டுள்ள அணுக்கட்டமைப்பை பொறுத்து மாறுபடுகிறது என்பதே ராமன் விளைவு. இந்த எளிய கண்டுபிடிப்பு தான் அணுக்கழிவுகளை தொலைவில் இருந்தே ஆய்வு செய்தல், புற்றுநோய் கண்டறிதல், தோலின் வழியாக மருந்தை செலுத்துதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு, ரத்தகுழாயில் கொலஸ்ட்ரால் படிவதை கண்டறிதல் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய் கண்டறிதலில் பயன்படுகிறது.
இதுபோக, மீயொலி மற்றும் ஹைப்பர்சோனிக் அதிர்வெண்களின் ஒலி அலைகளால் ஒளியின் மாறுபாடு, சாதாரண ஒளியில் வெளிப்படும் படிகங்களில் உள்ள அகச்சிவப்பு அதிர்வுகளில் எக்ஸ்-கதிர்களால் உற்பத்தி செய்யப்படும் விளைவுகள் மற்றும் படிக இயக்கவியலின் அடிப்படை சிக்கல் தொடர்பான ஆய்வுகளையும் சர் சி.வி. ராமன் மேற்கொண்டார்.
சர் சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு:
1926 இல் இந்திய இயற்பியல் பத்திரிகையை நிறுவி, ஆசிரியராக இருந்தார்.  இந்திய அறிவியல் அகாடமியை நிறுவுவதற்கு நிதியுதவி செய்தார். பெங்களூரில் உள்ள தற்போதைய அறிவியல் சங்கத்தின் தலைவராக செயல்பட்டுள்ளார். ஒளி ஃபோட்டான்கள் கோண உந்தம் அல்லது சுழற்சியைக் கொண்டிருப்பதை ராமனும் அவரது மாணவர் சூரி பகவந்தமும் கண்டுபிடித்தனர். இசைக்கருவிகளின் அதிர்வெண்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது என, அறிவியல் உலகிற்கு சர் சி.வி. ராமன் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மேலும் காண

Source link

• Divyabharathi Photos : என் போதை தேனே..கருப்பு உடையில் ஜொலிக்கும் அழகி திவ்ய பாரதியின் புகைப்படங்கள்!

Divyabharathi Photos : என் போதை தேனே..கருப்பு உடையில் ஜொலிக்கும் அழகி திவ்ய பாரதியின் புகைப்படங்கள்!

Divyabharathi Photos : என் போதை தேனே..கருப்பு உடையில் ஜொலிக்கும் அழகி திவ்ய பாரதியின் புகைப்படங்கள்!

Source link

• TN Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – சென்னையில் எப்படி? இன்றைய நிலவரம்

TN Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – சென்னையில் எப்படி? இன்றைய நிலவரம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும்.

நாளை, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய  தமிழகப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும்.

வறண்ட வானிலை:

26 ஆம் தேதி முதல் 28 தேதி வரை, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  வடதமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  வரும் 29 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  மிமிசல் (புதுக்கோட்டை) 2, எச்சன்விடுதி (தஞ்சாவூர்) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

27.02.2024 மற்றும் 28.02.2024:

மன்னார்    வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக   கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Source link

• southern 34 railway stations gonna upgraded to world class standards kick start by pm modi | TN Railway Stations: உலக தரத்தில் அப்கிரேட் ஆகும் 34 தென்னக ரயில் நிலையங்கள்

southern 34 railway stations gonna upgraded to world class standards kick start by pm modi | TN Railway Stations: உலக தரத்தில் அப்கிரேட் ஆகும் 34 தென்னக ரயில் நிலையங்கள்

TN Railaway Stations Upgrade: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.
ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்:
நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்தும், “அம்ருத் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதுமுள்ள போக்குவரத்து நிறைந்த,  ஆயிரத்து 318 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட தேர்ந்தெடுக்கப்பட்டன. முதற்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை மற்றும் லிஃப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 554 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். வரும் 26ம் தேதி காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் 34 ரயில் நிலையங்கள்:
“அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து மொத்தமாக 34 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தென்மேற்கு ரயில்வே துறையை சேர்ந்த மூத்த அதிகாரி பேசுகையில், “கர்நாடகாவில் 28 ரயில் நிலையங்களும், ஆந்திராவில் இரண்டு ரயில் நிலையங்களும், தமிழகத்தில் இரண்டு ரயில் நிலையங்களும், மற்றும் கோவாவில் இரண்டு ரயில் நிலையங்களும் ரூ.801.9 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ஹுப்பள்ளி கோட்டத்தின் ஏழு நிலையங்கள்- அல்மட்டி, பாதாமி, பாகல்கோட், விஜயபுரா, முனிராபாத், சன்வெர்டாம், வாஸ்கோடகாமா; பெங்களூரு கோட்டத்தின் 15 நிலையங்கள்- துமகுரு, ஒயிட்ஃபீல்டு, பங்காரப்பேட்டை, சன்னப்பட்டணா, தருமபுரி, ஓசூர், தொட்டபள்ளாப்பூர், இந்துப்பூர், கெங்கேரி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், மல்லேஸ்வரம், மாலூர், மண்டியா, ராமநகரம்; மற்றும் மைசூர் கோட்டத்தின் 12 நிலையங்கள்- சாகர் ஜம்பகுரு, சக்லேஷ்பூர், ஷிவமொக்கா டவுன், சுப்ரமணிய சாலை, தல்குப்பா, திப்தூர், பந்தவாலா, சாமராஜநகர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, ஹாசன் மற்றும் ராணிபெண்ணூர் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்படும்  ரயில் நிலையங்கள் பிரமிக்க வைக்கும் வகையில், அதிநவீன வசதிகள் கொண்டதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் “அம்ருத் பாரத் நிலையம்”:
“அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் முதற்கட்டத்தில் தெற்கு ரயில்வே துறையின் கீழ், திருத்தணி, சூளூர்பேட்டா, செயிண்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூர் – சென்னை கடற்கரை ரயில் நிலையம் இடையேயான பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வில்லிவாக்கம், எலிபேண்ட் கேட் பிரிட்ஜ், பேசின் பிரிட்ஜ் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையங்களிலும், மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link

• Karnataka Cricketer K Hoysala Dies Of Heart Attack While Celebrating On The Ground Tamil Latest Sports News

Karnataka Cricketer K Hoysala Dies Of Heart Attack While Celebrating On The Ground Tamil Latest Sports News

கடந்த சில ஆண்டுகளாகவே, 16 வயது டீன் ஏஜ் முதல் 40 வயது இளைஞர்கள் வரை திடீர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது வருவது போன்ற செய்திகள் அடிக்கடி நாம் கேள்வி பட்டு வருகிறோம். அதிலும், குறிப்பாக, 18 வயதிலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த மாரடைப்பால் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு என்னதான் காரணம்? என தெரியாமல் இன்றைய கால இளைஞர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதேபோல், சமீப காலமாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது, நடைபயிற்சியின்போது இளைஞர்கள் சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் தந்தது. அந்த வடு மாறுவதற்குள் அடுத்த சில நாட்களில் அடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் இருந்து மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கர்நாடக கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு:
கர்நாடக கிரிக்கெட் வீரர் கே ஹொய்சாலா மாரடைப்பால் மரணம் அடைந்தார். களத்தில் வெற்றியை கொண்டாடும் போது, ​​கே ஹொய்சலாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் பிறகு நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். ஏஜிஸ் தென் மண்டல போட்டியின் ஒரு போட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இப்போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே பெங்களூரு ஆர்எஸ்ஐ கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்தது. போட்டியில் கர்நாடகா வெற்றி பெற்றதைக் கொண்டாடிய ஹொய்சலா, கடுமையான நெஞ்சுவலி காரணமாக மைதானத்தில் மயங்கி விழுந்தார். அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சை அளித்தும் பலனில்லை:
34 வயதான ஹொய்சாலா ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்ததாக ஹொய்சாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வியாழன் அன்று நடந்தது என்றும் அதன் தகவல் பிப்ரவரி 23 ஆம் தேதி மாலைதான் வெளிச்சத்திற்கு வந்தது என்றும் தெரிகிறது.
கே ஹொய்சலா ஒரு ஆல்-ரவுண்டராக அறியப்படுகிறார். இவர் ஒரு மிடில் ஆர்டரில் பேட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர். ஹொய்சாலா 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கர்நாடகா அணிக்காக விளையாடியுள்ளார். இது தவிர கர்நாடக பிரீமியர் லீக்கிலும் விளையாடினார்.
பௌரிங் மருத்துவமனையின் டீன் டாக்டர் மனோஜ் குமார் கூறுகையில், “ஹொய்சலா இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்” என்று தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரரின் மறைவுக்கு கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சமூக ஊடகங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்”ஏஜிஸ் தென் மண்டல போட்டியின் போது விளையாடி வந்த கர்நாடகாவின் கிரிக்கெட் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஹொய்சாலாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த சோகத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. இதன்மூலம், இறப்பு என்பது சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது” என தெரிவித்தார்.

Source link

• Samantha Photos : மலேசியாவில் சில் செய்யும் நடிகை சமந்தா!

Samantha Photos : மலேசியாவில் சில் செய்யும் நடிகை சமந்தா!

Samantha Photos : மலேசியாவில் சில் செய்யும் நடிகை சமந்தா!

Source link

• Latest Gold Silver Rate Today February 23 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

Latest Gold Silver Rate Today February 23 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 46,560 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,820  விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,320 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,290 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,400 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,290 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820  ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,290 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820  ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,290 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820  ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,290 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,820 ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,273 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.6,288 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,765 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,273 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,273 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,278 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,755 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,273 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,273 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,288 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,765 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,273 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,750 ஆகவும் விற்பனையாகிறது.

Source link

• Electricity Act: வந்தாச்சு மகிழ்ச்சி செய்தி.. புதிய மின் இணைப்பு பெற இனி காத்திருக்க தேவையில்லை!

Electricity Act: வந்தாச்சு மகிழ்ச்சி செய்தி.. புதிய மின் இணைப்பு பெற இனி காத்திருக்க தேவையில்லை!

நகரங்களில் 3 நாட்களிலும், கிராமங்களில் 15 நாட்களில் இனிமேல் புதிய மின் இணைப்பு கிடைக்கும் என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

புதிய மின் இணைப்புக்காலம்:

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய மின் இணைப்பு கிடைக்கும் வகையில் தற்போது அனைத்து விதிகளையும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அதன்படி காத்திருக்கும் காலமானது பெரிய நகரங்களில் 7 நாட்களுக்கு பதிலாக 3 நாட்களிலும், கிராமங்களில் புதிய மின் இணைப்புகளுக்கு 30 நாட்களில் இருந்து 15 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் புதிய இணைப்புகள் பெறவும், மேற்கூரை சோலார் யூனிட்களை நிறுவவும் விதிகளை அரசு தளர்த்தியுள்ளது.

இதுதொடர்பான மின்சாரம் (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020-ல் திருத்தம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மெட்ரோ நகரங்களில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான நேரம் 7 நாட்களில் இருந்து 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு பதிலாக 7 நாட்களிலும் புதிய மின் இணைப்பு கிடைக்கும். அதேசமயம், கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில், புதிய இணைப்புகளை எடுக்க அல்லது ஏற்கனவே உள்ள இணைப்புகளை மாற்றுவதற்கான கால அளவு 30 நாட்களுக்கு முன்பு போலவே இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.

புதிய மீட்டர் பொருத்தப்படும்

தொடர்ந்து பேசிய ஆர்.கே.சிங், “உண்மையான மின் பயன்பாட்டுக்கு ஏற்ப மீட்டர் ரீடிங் இல்லை என புகார் எழுந்தால், புகார் பெறப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் விநியோக உரிமதாரர் கூடுதல் மீட்டரை பொருத்த வேண்டும். இந்த கூடுதல் மீட்டர் அளவீடுகளைச் சரிபார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும். புதிய விதிகளில், நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வரும் பட்சத்தில், மின் நுகர்வு சரிபார்ப்பதற்காக, நிறுவனங்கள் நிறுவியுள்ள மீட்டர்களை சரிபார்க்கும் விதிமுறையும் உள்ளது. நுகர்வோர் நலனே அரசுக்கு முக்கியம் என்பதால் இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

EV வாகனத்தை சார்ஜ் செய்ய புதிய இணைப்பு

புதிய விதிகளின் கீழ், நுகர்வோர் தங்கள் மின்சார வாகனங்களை (EV களை) சார்ஜ் செய்ய தனி மின் இணைப்பைப் பெறலாம். 2070க்குள் கார்பன் உமிழ்வைக் குறைத்து நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை எட்ட வேண்டும் என்ற நாட்டின் இலக்கை நோக்கி நகர்வதற்கு இது வசதியாக இருக்கும். கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், காலனிகள் போன்றவற்றில் வசிப்பவர்கள் இப்போது விநியோக உரிமதாரரிடமிருந்து அனைத்திற்கும் தனிப்பட்ட இணைப்புகளையோ அல்லது மொத்த வளாகத்திற்கும் சேர்த்து ஒற்றை-புள்ளி இணைப்பையோ தேர்வு செய்ய விருப்பம் உள்ளது.

அரசு விதிகளை தளர்த்தியது

மேலும் 10 கிலோவாட் வரையிலான சூரிய மின்சக்தி வசதியை ஏற்படுத்த தொழில்நுட்ப ஆய்வுகள் தேவையில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு சாத்தியக்கூறு ஆய்வுக்கான காலக்கெடு 20 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு முடிக்கப்படாவிட்டால், அது அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படாது” எனவும் மத்திய எரிசக்திதுறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

Source link

• IND VS ENG 4th Test Day 1 Highlights: விறுவிறுப்பாக தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டி; முதல் நாளில் நடந்தது என்னென்ன?

IND VS ENG 4th Test Day 1 Highlights: விறுவிறுப்பாக தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டி; முதல் நாளில் நடந்தது என்னென்ன?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் குறித்து இங்கு காணலாம்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இந்திய அணி சார்பில் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

ஆகாஷ் தீப் இந்தியா சார்பாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட 313வது வீரர் ஆவார்.

இந்திய அணி சார்பில் மிகவும் முக்கியமான மாற்றமாக அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆகாஷ் தீப் இதுவரை 17 ஓவர்கள் பந்து வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

ஆகாஷ் தீப் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுகளும் இங்கிலாந்து அணியின் டாப் மூன்று பேட்ஸ்மேன்களான ஜாக் கார்வ்லே, பென் டக்கெட் மற்றும் ஒல்லிப் போப் ஆவர்.

இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேனான ஜோ ரூட் 226 பந்துகளில் 106 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். இவருடன் ஒல்லி ராபின்சன் 31 ரன்களில் களத்தில் உள்ளார்.

இந்த சதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டின் 31வது சதமாக பதிவாகியுள்ளது.

இந்திய அணி சார்பில் மொத்தம் 14 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. இதில் ஜடேஜா 27 ஓவர்கள் பந்து வீசி அதில் 7 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார்.

இந்திய அணி தன்னிடம் இருந்த மூன்று ரிவ்யூக்களையும் வீணடித்துவிட்டது.

Source link

• south indian actress samantha ruth prabhu latest bikini pics set fire on social media fans enjoyed | Samantha: நுண்சிலை செய்திடும் பொன் சிலையே! பிகினி உடையில் மனதை கவர்ந்த சமந்தா

south indian actress samantha ruth prabhu latest bikini pics set fire on social media fans enjoyed | Samantha: நுண்சிலை செய்திடும் பொன் சிலையே! பிகினி உடையில் மனதை கவர்ந்த சமந்தா

சமந்தா நீண்ட நாட்களாக நடிப்பில் இருந்து விலகியிருந்தாலும், நடிகையின் பெயர் ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதுதான் இன்றைய டிரெண்டிங் டாபிக்.
சமந்தா:
தென்னிந்திய திரையிலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் நடிக்கும் தனது ஒவ்வொரு படத்திலும் தன்னை யார் என்று நிரூபணம் செய்வார். திரையில் எந்த விதமான கதாபாத்திரத்தையும் ஏற்று நேர்த்தியாக நடிப்பவர்.
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக படத்தில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை இவரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வெளியிட்டார். சமீபத்தில்  சமந்தா மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதில் இருந்து மீண்டதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பு காரணமாகதான் சமந்தா படத்தில் நடிப்பில் இருந்து விலகி இருந்ததாகவும் தெரிகிறது.
பிகினி உடை:
இந்தநிலையில், சமந்தா ரூத் பிரபு தற்போது மலேசியாவில் உள்ள லங்காவியில் தனது ஓய்வு காலத்தை ஜாலியாக எஞ்சாய் செய்து வருகிறார். நேற்று மாலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சமந்தா, பிரவுன் நிற பிகினியில் ஒரு குளத்தில் ஜாலியாக குளிக்கிறார். இந்த பிகினி உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் டாப் டிரெண்டிங். முன்னதாக, சமந்தா மலேசியாவில் தான் இருந்த பல படங்களை பகிர்ந்து கொண்டார்.

படத்தில் இருந்து விலகல்:
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா மாமா ‘ பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சமந்தா ரூத் பிரபு . கடந்த ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்தில் இருந்து சமந்தா நடிப்பு உலகில் இருந்து விலகி இருக்கிறார் .
குஷி படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம், சமந்தா தனது உடல்நிலையில் கவனம் செலுத்துவதற்காக குறைந்தது ஒரு வருடத்திற்கு படத்தில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, தற்போது உலகம் முழுவதும் பயம் செய்து வந்தார். இந்தநிலையில்தான், சமந்தா மீண்டும் படத்தில் நடிக்க தொடங்க இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு இந்த பிரச்சனை ஏற்பட்ட அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. இது எனக்கு மிகவும் கடினமான ஆண்டு.” என தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில், அவர் தனது ‘யசோதா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தினார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிட்டாடல் என்ற வெப் தொடரில் சமந்தா நடிக்கவுள்ளார் . வருண் மற்றும் சமந்தா இணையும் இந்த வெப் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், அதன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் காண

Source link

• Masimagam 2024: பௌர்ணமியன்று வரும் மாசிமகம்! திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்!

Masimagam 2024: பௌர்ணமியன்று வரும் மாசிமகம்! திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்!

மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திர நாளே மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மகம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று பௌர்ணமி என்பதால் கூடுதல் சிறப்பு. பௌர்ணமி அன்று மாசி மகம் வருவதால் பலரும் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

மாசி மகம்:

இந்நாளில் புண்ணிய நதிகளிலோ அல்லது கடல்களிலோ நீராடுவது முக்கிய அடைவதற்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் மட்டுமின்றி தமிழ் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் பிரபலமானது. மேலும் இந்நாளில் வழிபடும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் கடல் கரைகள் ஆறுகள் அல்லது குளங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை தெப்போச்சவம் என்றழைக்கப்படும். அங்கு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதனை காண  மங்களகரமான நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  வீட்டிலேயே விரதம் இருந்து சிவனையும் பார்வதையும் வழிபட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் உங்களது 7 ஜென்மம் பாவம் தீரும் என்பது ஐதீகம். அது போல் நீங்கள் சிவன் பார்வதி முருகனைத் தவிர பெருமாளையும் வழிபடலாம்.

கிரிவலம்:

அதேபோல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும் நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். இது திருவண்ணாமலை கிரிவலம் அல்லது அருணாச்சல கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நாளில் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு சிரமமின்றி செல்ல சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வே துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண 06130 ) காலை 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்திற்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

• Assam Cabinet Scraps Muslim Marriage and Divorce Act, says will Curb Child Marriage | Assam Cabinet: அசாமில் இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் ரத்து

Assam Cabinet Scraps Muslim Marriage and Divorce Act, says will Curb Child Marriage | Assam Cabinet: அசாமில் இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் ரத்து

Assam Cabinet: அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான, 89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்லாமிய திருமண சட்டம் ரத்து:
அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு செய்வது தொடர்பான,  89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மாநில சுற்றுலா அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “அசாமில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த பயணத்தின் மிக முக்கிய முடிவாக அசாம் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம், 1935 ஐ ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நடவடிக்கை என்பது அசாமில் இனி இந்தச் சட்டத்தின் கீழ் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளை பதிவு செய்ய முடியாது. நம்மிடம் ஏற்கனவே ஒரு சிறப்பு திருமணச் சட்டம் உள்ளது.  அனைத்து திருமணங்களும் அந்த விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
”குழந்தை திருமணங்கள் தடுக்கப்படும்”
மேலும், “அனுமதிக்கப்பட்ட வயதை எட்டாத சிறுவன் மற்றும் சிறுமிகளுக்கு திருமணங்களை செய்ய, இஸ்லாமிய சட்டம் பயன்படுத்தப்படுவது எங்கள் கவனத்திற்கு வந்தது. இதன் காரணமாக அந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படும்.  தற்போது வரை மாநிலத்தில் 94 பேர் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்து வருகின்றனர். அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் 94 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்” என  அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார்.
விரைவில் பொது சிவில் சட்டம்:
அண்மையில் இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, “நாங்கள் பலதார மணத்தை தடை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதனிடையே,  உத்தராகண்ட் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. நாங்கள் இப்போது இரண்டு சிக்கல்களையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், இதன் மூலம் வலுவான சட்டத்தை உருவாக்க முடியும்.
பலதார மணம் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகிய இரண்டையும் ஒரே சட்டத்தில் எவ்வாறு சீரமைப்பது என்பதை ஒரு நிபுணர் குழு கண்காணிக்கும் ” என கூறியிருந்தார். இந்நிலையில் தான், மாநிலத்தில் இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களை ரத்து செய்ய, அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில் உத்தராகண்ட் மாநிலத்தை போன்று அசாமில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண

Source link

• petrol and diesel price chennai on February 24th 2024 know full details

petrol and diesel price chennai on February 24th 2024 know full details

Petrol Diesel Price Today, February 24: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 24ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 644வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

மேலும் காண

Source link

• Actor Ajithkumar’s Valimai Movie Completed 2 Years Today

Actor Ajithkumar’s Valimai Movie Completed 2 Years Today

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை (Valimai) படம் வெளியாகி இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வலிமை:
2018 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூன்று பேரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் இணைந்தனர். இந்தப் படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் மீண்டும் இந்த மூன்று பேரும் இரண்டாவதாக இணைந்த படம் தான் வலிமை. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த படம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தான் வெளியானது.
வலிமை படத்தில் கார்த்திகேயா, ஹியூமா குரேஷி ,குர்பானி நீதிபதி, சுமித்ரா, சுனைனா பாதம், வைஷ்ணவி சைதன்யா, ஜி.எம்.சுந்தர், சைத்ரா ரெட்டி, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
சென்னையில் சாத்தானின் அடிமை என்று அழைக்கப்படும் மர்ம கும்ப கும்பல் போதைப்பொருள் கடத்தல் திருட்டு மற்றும் கொலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் அதிகாரியாக அஜித் நியமிக்கப்படுகிறார். வழக்கை விசாரித்து குற்றவாளிகளின் நிரம்பும் நிலையில் தனது தம்பியும் இந்த கும்பலில் ஒருவர் என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை வலிமைப்படுத்தி கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
அப்டேட் கேட்டு நொந்துபோன ரசிகர்கள்
உண்மையில் வலிமை படம் வெளியானபோது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருந்த காத்திருப்பு வீணானது என்றே சொல்லப்பட்டது. அதற்கு காரணம் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் தள்ளிக் கொண்டே சென்றது. மீண்டும் இயல்பு நிலை திரும்பி ஷூட்டிங் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் அப்டேட் கேட்டு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ மூன்று பேர் வீட்டின் கதவை தட்டாதது மட்டும்தான் மிச்சம்.
அந்த அளவுக்கு உள்ளூர் தொடங்கி உலகம் வரை எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என கேட்டு காத்திருந்தனர். ஒருகட்டத்தில் டென்ஷனாகி அஜித் அறிக்கையே விட்டு படத்தின் அப்டேட் உரிய நேரத்தில் வரும் என கூறினார். ஆனால் வலிமை படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்ற நிலையில் இரண்டாம் பாதையில் அம்மா சென்டிமென்ட் என வேறு பக்கம் கதை சென்றதால் படம் டோட்டலாக சொதப்பியது என்ன ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
மேலும் வில்லனை துரத்தும் அஜித்தின் பைக் காட்சிகள், அதே போல் குற்றவாளிகளின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது நடக்கும் பஸ் சேசிங் சண்டை என இரண்டும் மிக அருமையாக படமாக்கப்பட்டன அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் அஜித் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். ஆக ஆக்சன் பாதி செண்டிமெண்ட் மீது என டபுள் ட்ரீட்டாக வெளியாகி இருந்த வலிமை படம் அஜித் ரசிகர்களை பொறுத்தவரை ஒரு வெற்றி படம்தான்.
அதேசமயம் மீண்டும் அஜித்குமார், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய 3 பேரும் 3வது முறையாக 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• அடுத்த 3 மணிநேரம்! 9 மாவட்டங்களை அட்டாக் செய்யப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 3 மணிநேரம்! 9 மாவட்டங்களை அட்டாக் செய்யப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link

• 7 Am Headlines today 2024 24th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சாந்தன் இலங்கை செல்ல அனுமதி! ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்

7 Am Headlines today 2024 24th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சாந்தன் இலங்கை செல்ல அனுமதி! ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்

தமிழ்நாடு:

உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்; தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் – ஐடி உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்தில் சிக்கியது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமம் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும் – திமுக ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அடுத்த 3 நாட்களில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் – அண்ணாமலை காட்டம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.
இன்றைக்கு திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது – கனிமொழி எம்.பி

இந்தியா:

குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் 25 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் கண்டோன்மெண்ட் எம்.எல்.ஏ கார் விபத்தில் உயிரிழப்பு
தெலங்கானாவில் மானிய விலையில் எரிவாயு வழங்கும் திட்டம் பிப்ரவரி 27ம் தேதி தொடக்கம் – காங்கிரஸ் அறிவிப்பு
கர்நாடகாவிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.
பிரதமர் நரேந்திர மோடி நன்கொடை வியாபாரம் செய்கிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நீதி யாத்திரையில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்கிறார்.
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக அழுத்தம் தருவதாக ஆம் ஆத்மி புகார்.
வாச்சாத்தி குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

உலகம்:

ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – எலான் மஸ்க்.
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் சூரியச் சிதறல்களை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள மால்டா நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏமனில் ஹவுத்தி ஆதரவாளர்கள் போராட்டம்.
சீனாவில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தால் அனிமேஷன் தொடரின் வீடியோ வெளியாகியுள்ளது.
காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும் என்று பிரதமர் நேதன்யா அறிவிப்பு

விளையாட்டு:

மகளிர் பிரீமியல் லீக் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ரஞ்சி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் 1 கோடி ரூபாய் பரிசும், BMW காரும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

Published at : 24 Feb 2024 07:04 AM (IST)

மேலும் காண

Source link

• Akash Deep Was The Star Of India First Session IND VS ENG 4th Test Dismissed Ben Duckett, Ollie Pope And Zak Crawley To Put England Under Instant Pressure | Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம்

Akash Deep Was The Star Of India First Session IND VS ENG 4th Test Dismissed Ben Duckett, Ollie Pope And Zak Crawley To Put England Under Instant Pressure | Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்  இன்று பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில்  உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் நாள் ஆட்டம் முடிந்துள்ளது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த ஆகாஷ் தீப்:
முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தவகையில் ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. முன்னதாக இன்றைய போட்டியில் இந்திய அணியின் 313-வது வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் ஆகாஷ் தீப். அதன்படி தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் ஆகாஷ்.

WWW 🤝 Akash Deep! Follow the match ▶️ https://t.co/FUbQ3Mhpq9#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/YANSwuNsG0
— BCCI (@BCCI) February 23, 2024

அதன்படி, 21 பந்துகளில் 11 ரன்களை எடுத்த பென் டக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் தன்னுடைய முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.  அதேபோல் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஒல்லி போப் வும் டக் அவுட் முறையில் ஆகாஷிடம் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

பொறுமையாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரரான சாக் கிராலி 42 ரன்கள் எடுத்து ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். இப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சாக் கிராலி, பென் டக்கெட் மற்றும் ஒப்பி போப் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளர். அந்த வகையில்,  17 ஓவர்கள் வீசிய ஆகாஷ் 70 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது தொடர்பாக பேசிய அவர், “நான் பதட்டப்படவில்லை . எனது பயிற்சியாளர்களுடன் பேசியிருந்ததால், ஆட்டத்தில் கவனமாகவும் பதட்டமில்லாமலும் விளையாட உதவியாக இருந்தது. விரைவாக மூன்று விக்கெட்டுகளை எடுத்தது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் ஒவ்வொரு ஆட்டத்தையும் எனது கடைசி ஆட்டமாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்தவரை முயற்சி செய்து விளையாடுவோன்” என்று கூறினார்.

மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?

மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!

Source link

• Legend Saravanan: திருமண விழாவில் லெஜண்ட் சரவணன்! முண்டி அடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்த மக்கள்!

Legend Saravanan: திருமண விழாவில் லெஜண்ட் சரவணன்! முண்டி அடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்த மக்கள்!

Legend Saravanan: திருமண விழாவில் லெஜண்ட் சரவணன்! முண்டி அடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்த மக்கள்!

Source link