ஹபீபி: 'கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்'- தனுஷ் பாராட்டு| Actor Dhanush praised the film Habeebi in which his father Kasthuri Raja played the lead role

நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த “ஹபீபி’ படத்தைப் பாராட்டி இருக்கிறார்.

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹபீபி’.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் ‘ஹபீபி’ படகுழுவை பாராட்டி இருக்கிறார். “தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து “யூசுப்” கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பாராட்டியிருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed