வீரமணி பாலியல் வழக்கு:``கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?" - அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி | Raj Mohan responce to communistscriticism against TVK


தவெக – இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் தற்போது வார்த்தை போர் நிலவிவருகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தாலும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியே இடைத்தேர்தலை எதிர்க்கொள்கின்றனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னை திருவல்லிக்கேணி எம்ஓபி வைணவ உயர்நிலை பள்ளியில் புதிய சத்துணவுக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “தவெக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மிகவும் உறுதியானதாகவும், ஜனநாயகப்பூர்வமானதாகவும் உள்ளது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு.

 வீரபாண்டியன்,  பெ.சண்முகம்

வீரபாண்டியன், பெ.சண்முகம்

கடலில் பேனா சின்னம் அமைத்தே தீருவோம் என எதையும் அடம் பிடித்துச் செய்யும் அரசாக இது செயல்படாது. எனவே, அவர்கள் எங்கள் மீது விமர்சனம் வைக்கலாம். அதுதான் ஜனநாயகம். அதேப்போல, கம்யூனிஸ்ட்களிடம் கேட்க வேண்டும்… கடந்த சில தினங்களாக விவாதிக்கப்படும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுகை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகக் கொடூரமான வழக்கு. இதில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன? கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இத்தகைய போக்சோ வழக்குகள் மூடி மறைக்கப்பட்டன. தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இந்த விவகாரத்தைக் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Бывает, человек пьёт неделями. Родные не спят ночами. Наркологический стационар — это когда человек под присмотром врачей. Сначала снимают интоксикацию.…

  2. Близкий пьёт неделями. Тут голова кругом идёт. Наркологическая клиника — это не просто слова. Специалисты приедут на дом. Анонимный наркологический…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed