இறந்தவரின் பெயரை நீக்குவது தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட எந்தவொரு குடிமகனின் பெயரையும், உரிய முன்னறிவிப்பும் நேரடி விசாரணையும் இன்றி நீக்க முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இரண்டு வகையாகக் குடிமக்களைப் பிரிக்கவில்லை. அதாவது, வாக்களிக்கும் உரிமை உள்ள ஒரு பிரிவு குடிமக்கள், வாக்களிக்கும் உரிமை அற்ற மற்றொரு பிரிவு குடிமக்கள் என இங்கு எந்தப் பாகுபாடும் இல்லை.
இந்தியக் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பது, எனது பார்வையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 326 மற்றும் 14-ஐ முற்றிலும் மீறுவதாகும்.
மில்லியன் கணக்கான இந்தியக் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, அவர்களைச் சொந்த நாட்டிலேயே வாக்களிக்கும் உரிமையற்ற இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடவடிக்கையும் அடிப்படையிலேயே தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதும் ஆகும்” என்று பேசியிருக்கிறார் உஜ்ஜல் புயான்.
உஜ்ஜல் புயான் இந்தப் பேச்சை ஹைதராபாத்தில் நடந்த 19-வது NALSAR நீதிபதி பி.ஆர். சாவ்னி நினைவு நிகழ்வில் பேசியிருக்கிறார்.

























Refreshing tone compared to the dry corporate posts on similar topics, and a stop at levqino carried that personality through…