"ரஜினி சாருடன் டான்ஸ் - கனவு நனவாச்சு" — நடிகை பூர்ணா | Dancing with Rajinikanth is a Dream Come True: Actress Poorna


இது குறித்து அவர், “சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது திரையுலகில் உள்ள அனைவரின் கனவு.

சிறுவயதில் ‘படையப்பா’ படத்தின் ‘மின்சார கண்ணா’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம், ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்குப் பதிலாக நான் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

பல மேடைகளில் அந்தப் பாடலுக்கு நடனமாடியும் இருக்கிறேன். ஆனால், ஒருநாளில் நேரில் அவரோடு சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை.

எனது கனவு நனவாகியுள்ளது. முதல் ஷாட் முடிந்ததுமே ரஜினி சார் எனது கண்களைப் பாராட்டிப் பேசினார். எத்தனையோ சிறந்த நடிகைகளுடன் நடித்த ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து எனக்கு இந்தப் பாராட்டு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்” எனப் பகிர்ந்திருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed