"போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?"- மது ஒழிப்பு கூட்டமைப்பு | increasing variety of liquor available in tasmac Anti-Liquor Federation condemns


பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்ட 717 டாஸ்மாக் கடைகளை மூடிய அரசு இப்போது 25 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துவது, “போதை இல்லாத தமிழகம்’ என்ற அரசின் இலக்குடன் புதிய மதுபான அறிமுகம் என்பது முரணானது.

புதிய மதுபான வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினரிடையே ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து அரசு சிந்திக்கவேண்டும். மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையங்கள் எத்தனை உருவாக்கப்பட்டுள்ளன? தமிழகத்தை படிப்படியாக மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவதற்கான அரசின் தெளிவான காலக்கெடு மற்றும் செயல்திட்டம் என்ன? போன்ற கேள்விகளை அரசு முன் மக்கள் வைக்கிறார்கள்.

சி.சே. இராசன்

சி.சே. இராசன்

மது விற்பனையை வெறுமனே வருவாய் ஆதாரமாகப் பார்க்காமல், குடும்பங்களின் பொருளாதார, சுகாதாரச் சூழலை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான ஆலோசனை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை அரசு உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கான விளையாட்டு, வேலைவாய்ப்பு, சமூகப் பங்கேற்பு வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

போதை இல்லாத தமிழகம் என்பது அரசின் வெற்று முழக்கமாக இல்லாமல், மது விற்பனையைக் குறைக்கும் நடைமுறை கொள்கையாக மாற வேண்டும். எனவே, 25 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, மதுவிலக்கை நோக்கிய தெளிவான காலக்கெடு கொண்ட செயல் திட்டத்தை அரசு வெளியிட வேண்டும் என தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Привлечь трафик на сайт [img]https://foto-host.site/uploads/img_0df23e2442.png[/img] Постоянный поток посетителей помогает развивать веб-проект, анализировать работу страниц и регулярно собирать информацию об активности…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed