தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏழு நாள் பயணமாக இன்று பிரிட்டன் கிளம்புகிறார். மீண்டும் அவர் வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.

இது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை…

“தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8.491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு

இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும். உலகளாவிய திறன் மையங்களையும் (GCCs) நிறுவி செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள். மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான குழு இன்று (10.9.2026) சென்னையிலிருந்து புறப்பட்டு, 17.9.2026 அன்று சென்னை திரும்பும்.

இக்குழுவில் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப். இ.ஆ.ப. மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெறுகின்றனர்”.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Оновлення каталогу регулярні, щоразу додається щось під свіжу техніку. Мотоботи з жорстким захистом гомілки виправдовують свою ціну і не розлазяться…

  2. Спершу варто переглянути весь розділ, бо потрібна деталь часто ховається серед схожих. Колодки відходили цілий сезон активної їзди, і гальма…

  3. Екіпірування знайдеться і для спокійної їзди по місту, і для бездоріжжя. Мотоботи з жорстким захистом гомілки виправдовують свою ціну і…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed