தாராபுரம்: அதிமுக- திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள்! சொல்கிறார் சத்தியபாமா tharapuram tvk candidate sathyabama about dmk and admk


தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது.

காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க சென்றாலும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த வேட்பாளர் சத்தியபாமா, “தாராபுரம் தொகுதியில் எங்களுக்கு எதிர்ப்பு என்பது முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் நான்கைந்து பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் ரெடியாக இருக்கிறார்கள்.

திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்டு அதை வீடியோ எடுத்து பரப்புகிறார்கள். எங்களுக்கு எதிர்ப்பு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தாராபுரம் கிழக்கு பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு எங்களுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது.

த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா

த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா

ஆனால், எதிர்க்கட்சிகளுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. மக்கள் விரும்பும் வகையில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களைத்தான் தேர்வு செய்ய இருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இப்படிச் செய்கிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களாக நான் இதே தொகுதியில்தான் இருக்கிறேன். மக்களின் தண்ணீர் பிரச்னைகள் குறித்து நேரில் சென்று பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் வராத பிரச்னை இப்போது வருகிறது என்றால் மக்களே புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க- தி.மு.க இந்த இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்துக் கொண்டு திட்டமிட்ட இந்தச் சதியைச் செய்து வருகிறார்கள். தேர்தலில் நிச்சயம் மக்கள் பதில் சொல்வார்கள்” என்றார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed