ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ் , சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்'- டி.ஆர் பாலு புகார் | Vijay, Aadhav, and C.T.R should be sent summons and questioned T.R. Balu files complaint

மாநிலத்தின் முதலமைச்சரும் இரு அமைச்சர்களும் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இக்குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை அவர்களிடமிருந்து உடனடியாகப் பெறுவது அவசியமாகும்.

அவர்களிடம் ஆதாரங்கள் உள்ளனவா? இருந்தால், அவற்றை இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்காதது ஏன்? விசாரணை தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு அனுமதியின்றிக் கிடைத்துள்ளனவா? அவற்றிலுள்ள தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள இவ்வழக்கில், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கோ மறைக்கப்படுவதற்கோ இடமளிக்காமல் அவற்றை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். அதுதான் விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பொய்யாக முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, விசாரணை ரகசியங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பொருந்தக்கூடிய பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு . அதேவேளையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும், அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆகவே, முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரையும் ‘சம்மன்’ செய்து விசாரிக்க வேண்டும்” என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Source link


Latest News

View All

  1. закладку метадона купить лирика 150 Мефедрон, кокаин, бошки, гашиш купить амфетамин купить трамадол 50 https://alupkakupit.xyz купить бошки героин закладки купить…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed