"சங் பரிவாரின் B Team ஆக மாறிவிட்டது காங்கிரஸ் அரசு" - பினராயி மீதான விசாரணைக்கு சிபிஎம் கண்டனம் | "Congress government has become the 'B-team' of the Sangh Parivar" – CPM condemns probe against Pinarayi.


சி.எம்.ஆர்.எல் தாது மணல் கம்பெனியிடம் இருந்து மகள் மூலம் லஞ்சம் பெற்றதாக சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறியது அமலாக்கத்துறை.

மேலும், பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி-க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தது.

அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த கேரளத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் சி.பி.எம் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ​“கேரளத்தை ஆளும் இந்த அரசு சங்பரிவாரின் பி டீம் என்ற வகையில்தான் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமலாக்கத்துறை, கேரள முதல்வர் வி.டி.சதீசன் ஆகியோர் கூட்டாகச் செயல்படுகின்றனர்.

மோடி, இடி, வி.டி இணைந்து கம்யூனிஸ்டு இயக்கத்தை வேட்டையாட முயல்கின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, தற்போது அமலாக்கத்துறையின் வழிகாட்டுதல் பேரில் வழக்கை விசாரிப்பதற்கான அதிகாரம் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ​

மத்தியப் புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சி அரசியல் இயக்கங்களை நசுக்கும் நடவடிக்கையை பா.ஜ.க தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் வேலையைத்தான் இங்குள்ள அரசு செய்து கொண்டிருக்கிறது.

முன்னதாக, அமலாக்கத்துறை இதுபோன்ற உத்தரவுகளை தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளுக்குப் பிறப்பித்தபோது, அந்த மாநிலங்கள் அதனை முற்றிலுமாக நிராகரித்தன. ஆனால், இங்குள்ள அரசோ மத்திய ஏஜென்சியின் உத்தரவை ஏற்று ஆதரவளிக்கும் விசித்திரமான போக்கைக் கடைப்பிடிக்கிறது.

கேரளா சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன்

கேரளா சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன்

தேர்தல் காலங்களில் அமைக்கப்பட்ட இவர்களின் ரகசியக் கூட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னரும் அரசு மட்டத்தில் தொடர்கிறது. இந்த வழக்கு தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே, இதன் உண்மையான நோக்கம் பினராயி விஜயனைக் குறிவைப்பதுதான் என்பதை எங்கள் கட்சி மிகத் தெளிவாக விளக்கியிருந்தது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Выберите подходящий казино фергана чтобы сравнить доступные варианты. В подборке представлены актуальные предложения. Смотрите варианты оплаты. Ищете подходящее казино? Сравните…

  2. Быстро на сайте собранные компьютеры игровые купить для развлечений. В ассортименте представлены производительные системы. Рассматривайте компьютер по бюджету. Оценивая конфигурацию…

  3. При облаштуванні кімнати акуратний натяжний карниз для штор для квартири. Перед покупкою варто перевірити розмір приміщення. На вибір доступні варіанти…

  4. Пересмотрите любимый сериал дневники вампира смотреть онлайн онлайн. Найдите подходящий сезон и продолжайте знакомство с сюжетом. В каталоге доступны разные…

  5. Изучите интересующий вас лучшие надежные казино перед регистрацией. В каталоге собраны игровые платформы. Смотрите способы пополнения и вывода средств. Готовы…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed