கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
கோவையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களும் அதிகளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கும் புரியும் வகையில் மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் மாத்திரை சாப்பிடும் வேளை மற்றும் எப்போது சாப்பிட வேண்டுமென்ற குறிப்புகள் இடம்பெற்று இருந்தன.
சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் இந்தக் கவருக்கான செலவை, சில தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் மாத்திரை கவரில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ள போல. முதலில் கரூர்… இப்போது கோவையிலும் அதே நிலைமை” எனத் தெரிவித்திருந்தார்.


























The tone stayed consistent across the whole post which is harder than it looks for longer pieces, and a look…