"கொள்கை எதிரிகளோடு மோதினோம், இந்த கோமாளிக் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்"- ஸ்டாலின் | dmk stalin slams tvk in maduranthakam

ஆனால், நாம் இப்படி சொன்னால் முதலமைச்சர் என்ன பேசுகிறார் தெரியுமா? ”MLA பதவியை ரிசைன் செய்துவிட்டுத்தான் அவங்க த.வெ.க.வில் சேர்ந்திருக்காங்களாம்” – பெரிய கண்டுபிடிப்பு! ரிசைன் பண்ணவில்லை என்றால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடும்.

அதனால்தானே பொய்யான காரணத்தைச் சொல்லி, சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள்! அதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே CM சார்!

மக்களை ஏமாற்றுகிற முதலமைச்சருக்கும், உங்களை ஏமாற்றுகிற ஆளுங்கட்சி வேட்பாளருக்கும் தக்க பாடத்தை மதுராந்தகம் மக்கள் தர வேண்டும்!

மதுராந்தகம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்

மதுராந்தகம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்

தினமும் நான் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களிலும் பார்ப்பதுண்டு. தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு, அவர் விரட்டி அடிக்கப்படுகிறார், ஆளுங்கட்சி வேட்பாளரால் தொகுதிக்குள்ளேயே நுழைய முடியவில்லை என்று செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

மதுராந்தகம் மக்கள் தெளிவானவர்கள்! அதுமட்டுமா, மானமுள்ளவர்கள், சுயமரியாதை உணர்வு உள்ளவர்கள் என்று காட்டிவிட்டீர்கள்! உங்களுடைய இந்த ரோஷத்திற்காக என்னுடைய பாராட்டுகளையும் நன்றியையும் மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சிக்காரர்கள் எவ்வளவு திமிராகப் பேசுகிறார்கள் தெரியுமா? “த.வெ.க. சார்பில் நாங்கள் ஒரு நாயை நிற்க வைத்தால் கூட மக்கள் வாக்களிப்பார்கள்” என்று பேசுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! எவ்வளவு கேவலமான நினைப்பு! இதையெல்லாம் தமிழ்நாட்டில் கேட்கவே, பார்க்கவே அருவெறுப்பாக, அசிங்கமாக இருக்கிறது.

Source link


Latest News

View All

  1. Konta izveide Vavada platforma aiznem mazak par divam minutem un prasa tikai e-pastu vai telefona numuru. Analitikas sadala veido grafikus…

  2. Vavada atbalsta terzetava atbild videji paris minutes un uztur sarunu latviesu, anglu un krievu valoda. Automatiska izmaksa parskaita uzkratos laimestus…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed