தயாரிப்பாளர் கே.ராஜன்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் கே.ராஜன்

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான திரு. கே.ராஜன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரைப்படத் துறையின் நலன், குறிப்பாக சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கு குறித்து தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் திரு. கே.ராஜன் அவர்கள். பல தசாப்தங்களாக திரைப்படத் துறையுடன் நெருங்கிப் பயணித்த அவரது பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை. அவரது பங்களிப்பை திரைத்துறை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

தயாரிப்பாளர் கே.ராஜன்
தயாரிப்பாளர் கே.ராஜன்

திரு. கே.ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், தமிழ் திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed