மேற்கு வங்கம், அஸ்ஸாமில் காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்டது. இன்று காலை வாக்குகள் எண்ண தொடக்கியதில் இருந்தே அஸ்ஸாமில் உள்ள நாகோன் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா காங்கிரஸ் வேட்பாளர் சிபாமோனி போராவை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அவர் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.
இதே போன்று மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு தொகுதியிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தன. நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஹசிராணி 9 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
மற்றொரு தொகுதியான ரெஜிநகரில் பா.ஜ.க வேட்பாளர் 11 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் 2026ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் சுவந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பபானிபூர் தொகுதிகளில் வெற்றி பெற்றார், ஆனால் சுவந்து அதிகாரி பாபானிபூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு நந்திகிராம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் கடந்த மே 6 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட அதிகாரியின் முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹசிராணி ராத்தை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர் திடீரென வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு கொடுத்தார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளரையும் 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் மாநில அரசு கைது செய்து சில நாட்கள் சிறையில் அடைத்தது. இதே போன்று ரெஜிநகர் மற்றும் நவ்டா தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஜனதா உன்னயன் கட்சி (ஏஜேயுபி) தலைவர் ஹுமாயுன் கபீர், நௌடா தொகுதியை மட்டும் தக்க வைத்துக்கொண்டதால் ரெஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான அந்த தொகுதியில், ஹுமாயுன் கபீர் மகன் கோலம் நபி ஆசாத் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவின் சகாராவ் சர்க்கார் போட்டியிடுகிறார்.
இதே போன்று அஸ்ஸாமில் அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இத்தொகுதியில் 2019 மற்றும் 2024 தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது. கடந்த முறை காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற பிரத்யுத் போர்டோலோய் காங்கிரஸை விட்டு வெளியேறி, பாஜகவில் சேர்ந்து விட்டு தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2026 அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் திஸ்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாஜக இப்போது நாகோன் இடைத்தேர்தலில் முன்னாள் துணை ஆணையர் தேபாஷிஷ் சர்மாவை நிறுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் படத்ரோபா எம்எல்ஏ சிபாமோனி போராவை நிறுத்தியுள்ளது.

























Запой сопровождается продолжительным поступлением этанола и токсических продуктов его распада в кровь. Из-за этого страдают печень, сердце, сосуды, головной мозг…