அரசுப்பேருந்து வாங்க ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்; "வரலாற்றில் முதன்முறை"- கேரள முதல்வர் பாராட்டு | Industrialist donates ₹40 lakh to purchase a government bus; Kerala CM praises the gesture


கேரளத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பேருந்துகளை ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பை கே.எஸ்.ஆர்.டி.சி ஏற்படுத்தி உள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி சேவையை மேம்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி, கூட்டுறவு வங்கிகள், அறக்கட்டளைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் புதிய பேருந்துகளை ஸ்பான்சர் செய்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதையடுத்து எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள மூக்கன்னூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோஸ் என்பவர் கே.எஸ்.ஆர்.டி.சி-க்குப் புதிய பேருந்து வாங்க 40 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

ஹீ-மேன் ஆட்டோ ரோபோ பார்க் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஜோஸ், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடைபெற்ற நிகழ்வில், ரூ.40 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் வி.டி.சதீசனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.ஜான், உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம். ஜான், கே.எஸ்.ஆர்.டி.சி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் பிரமோஜ் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் வாங்க ரூ.40 லட்சம் நிதி வழங்கிய ஜோஸை பாராட்டிய வி.டி.சதீசன்

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் வாங்க ரூ.40 லட்சம் நிதி வழங்கிய ஜோஸை பாராட்டிய வி.டி.சதீசன்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்த பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கைகோர்க்க வேண்டும் என்ற அரசின் அழைப்பினை ஏற்று இந்த முடிவை எடுத்ததாக ஜோஸ் தெரிவித்தார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed