`அதிமுகவும், தவெகவும் ஒன்று என்றால் தவெகவை கலைத்து விடுங்கள்!’ - முதல்வர் விஜய்யை தாக்கும் அதிமுக

புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது அந்தத் தொகுதி. முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டத் தலைவர்கள் தொகுதிக்குள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏவும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், `சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது” என்று அவரை கடுமையாக விமர்சித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாலர் அன்பழகன் எம்.எல்.ஏ

புதுச்சேரி அதிமுக மாநில செயலாலர் அன்பழகன் எம்.எல்.ஏ

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், “சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் தங்கள் வேட்பாளருக்கோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளருக்கோ தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை விதிக்கவில்லை.

அதே நேரத்தில் தன்னுடைய அதிகாரபூர்வ அரசு வாகனம், அரசு ஊழியர்கள், அரசு அலுவலகம் மற்றும் அரசு இயந்திரத்தை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் இந்திய அரசியலமைப்பு வகுத்திருக்கும் சட்டம். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி தற்காலிக சபாநாயகராக இருக்கும் நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், அதனால் என் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறுகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

Source link


Latest News

View All

  1. A well calibrated piece that knew its scope and stayed inside it, and a look at jasperbrookmarketfoundry maintained the same…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed