"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" - தவிக்கும் கோவை கிராம மக்கள்  Villagers in Coimbatore are facing breathing difficulties due to the Adani Acc cement plant


எங்க வருமானத்துல பாதியை ஹாஸ்பிடலுக்கே செலவு பண்ண வேண்டியதா இருக்கு. டாக்டர்கிட்ட போன இந்த ஊருல நீங்க இருக்காதீங்க, காலி பண்ணிட்டு பக்கத்து ஊருக்குப் போனத்தான் உங்க பிரச்னை தீரும்னு சொல்லுறாங்க.

சிமெண்ட் தூசு

சிமெண்ட் தூசு

வீட்டோட கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடி வைச்சாலும், சிமெண்ட் தூள் உள்ளே வந்திடும். தரை மட்டுமில்லாம டிவி, பிரிட்ஜ், பாத்திரம்னு எல்லாத்திலும் வெள்ளை வெள்ளையா படிந்திடும். எவ்வளவு டைம் சுத்தப்படுத்தினாலும் போகாது. குடிக்கும் தண்ணீயில, சாப்பிடுற சாப்பாட்டுல கூட சிமெண்ட் தூசி விழுந்திடுது.

கொஞ்ச நேரம் வீட்டுக்கு வெளியே நின்னா கூட, உடம்பு முழுக்க சிமெண்ட் தூசி அப்பிக்கும். இதனால நாங்க ரொம்ப சிரமப்படுறோம். மரம் செடிகள் மீது சிமெண்ட் துகள் படியுறனால எல்லாம் கருகி போயிடுது. மண்ணின் நிறமே மாறுனதால, விவசாயம் பாழாகிடுச்சு.

இது சம்மந்தமா ஆலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்னு பல இடங்கள்ல புகார் சொல்லியும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவுக்கு மட்டுமே ஆய்வு நடத்ததுறாங்க. நாங்க நிம்மதியா வாழவும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed