`வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு முறையான பேருந்து வசதி இல்லையே..!'- மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

[ad_1]

திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் என நீளும் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் ஒன்று .

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமைந்துள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவானது, ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த இடத்திற்குச் செல்ல முறையான அரசுப் போக்குவரத்து வசதி இல்லை என்பதுதான் வருத்தமான ஒன்று.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் அமைந்துள்ளது வண்ணத்துப்பூச்சி பூங்கா. 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ 8 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா

தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவானது, திருச்சியின் மையப்பகுதியான சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பொதுவாக மரம், செடி, கொடிகள் என்பதைக் கடந்து இங்கு அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர வனம் முக்கியமான ஒன்று. 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிக்குரிய மரங்கள் மற்றும் தாவரங்களை சோதிடத்தின் அடிப்படையில் அமைத்துள்ளார்கள்.

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா

இங்குள்ள ஒவ்வொரு மரத்திற்குக் கீழேயும் அதன் பெயர், வகை, அறிவியல் பெயர் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாட்டுப் பகுதி, செயற்கை ஏரி, வண்ணத்துப் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான சூழல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருகை புரிகின்றனர். அவர்கள் இது குறித்தத் தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக வண்ணத்துப்பூச்சியைப் பற்றிய 20 நிமிட காணொளி இங்குள்ள திரையரங்கில் ஒளிபரப்பப்படுகிறது.

வார நாள்களில் ஓரளவும், வார இறுதி நாள்களில் அதிகளவு மக்களும் வருகை புரிகின்றனர். இப்படி வருபவர்கள் சொந்த வாகனத்தில் வருகை புரியும் சூழல் உள்ளது.

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஏனென்றால், காலையில் ஒருமுறை மட்டுமே அரசுப் பேருந்து வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் ஒரு தனியார் மினி பஸ் வருகிறது. இந்தப் பூங்காவில் இருந்து 4 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள மேலூர் கிராமம் வரை அவ்வப்போது அரசுப் பேருந்து வந்து செல்கிறது.

மற்றபடி பூங்கா அமைந்துள்ள இடத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்கு 250 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை செலவு செய்து ஆட்டோவைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இது குறித்து பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் கூறும் போது, “இவ்வளவு பெரிய இடத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு வந்து செல்லும்போது, மனதில் அமைதி ஏற்படுகிறது. குழந்தைகளோடு விடுமுறை நாளைக் கழிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது.

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஆனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்திற்கு அரசுப் பேருந்து வசதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சொந்த வாகனத்தில் வருபவர்கள் பொறுமையாக நேரம் செலவழித்து விட்டு செல்கிறார்கள்.

ஆனால் மற்றவர்களோ, மினி பஸ் நேரத்தைப் பார்த்துக் கொண்டே வேக வேகமாக கிளம்ப ஆயத்தம் ஆகிறார்கள். வார இறுதி நாள்களில் மட்டுமாவது அரசுப் பேருந்து வசதியைத் தாராளமாக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்னும் அதிகளவில் மக்கள் இவற்றைக் கண்டுகளிக்க ஏதுவாக அமையும்” என்றார்.

[ad_2]

Source link


  1. manga read online 870 Avatar

    Enthusiasts graphic stories can conveniently manga sites unblocked to explore favorite stories. Available titles offers drama, so visitors can discover something enjoyable. Latest episodes help readers continue reading.

  2. karnizi dlya shtor 995 Avatar

    Для оформлення вікон стильний карниз для штор для будинку. При виборі враховують особливості інтер’єру. У колекціях варіанти різної довжини. Нескладно знайти модель із зручним кріпленням. Вивчіть матеріали і оформіть замовлення. Підходящий карниз забезпечить зручне розміщення штор.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed