மதுப்பிரியர்களே உஷாராயிருங்க : மே 1-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை - Kumudam

குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், வள்ளலார் நினைவு நாள், மஹாவீர் ஜெயந்தி, உழைப்பாளர் தினம், மிலாடி நபி, மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நாட்கள், கோவில் பண்டிகைகள், உள்ளூர் திருவிழா காலங்களில் அவ்வப்போது உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அதே போன்று  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 21,22,23 ஆகய 3 தினங்கள் ஏற்கனவே டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மே 1-ம் தேதி  தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபான கூடங்கள். டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் (எப்.எல்.11) மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் தொழிலாளர் தினமான 1.5.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மூடப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

அதே போன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  தினங்களில் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

Source link


  1. novosti almaty 541 Avatar

    новости алматы сегодня последние погода в алматы новости

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Требуются свежие цветы? доставка цветов в выходные омск — пышные букеты для романтического свидания. Оформите заказ онлайн без лишних хлопот:…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed