"பாரதிராஜா சாருடைய மறைவு என்னை பர்சனலாக ரொம்பவே உலுக்கிவிட்டது!" - ஷாகுல் ஹமீது "The passing of Bharathiraja Sir has deeply shaken me personally!" – Shahul Hameed

தொலைக்காட்சிகளில் தொடர்ந்து 18 ஆண்டுகள் பணியாற்றினேன். 2010-க்குப்பிறகு இன்று வரை ஃப்ரீலான்ஸ் ஆங்கராகவும், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்து வருகிறேன். யூடியூப் தளங்களில் பாட்காஸ்ட் மற்றும் நேர்காணல்களைச் செய்து வருகிறேன்.

ஆனால், ‘ஹபீபி’ படத்திற்கான வாய்ப்பு என்னிடம் வந்தபோதும், 35 ஆண்டுகளுக்கு முன்பு என்ன பதிலைச் சொன்னேனோ, அதையேதான் அப்போதும் சொன்னேன். ‘என் அம்மாவிடம் நீங்கள் அனுமதி வாங்கிவிடுங்கள்’ என்றேன்.

அவர்களும் என் அம்மாவிடம் இந்தப் படத்தைப் பற்றி முழுமையாக விளக்கியிருக்கிறார்கள். இக்கதையில் நடிப்பதற்கு என் அம்மா க்ரீன் சிக்னல் தந்துவிட்டார். அப்படித்தான் நான் ‘ஹபீபி’ குழுவுக்குள் இணைந்தேன்.”எனத் தொடர்ந்து பேசினார்.

Shahul Hameed - Habeebi Movie

Shahul Hameed – Habeebi Movie

“இஸ்லாமியர்களைத் தவறாகப் சித்தரித்தத் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், அதற்கு இன்னொரு சினிமாவை வைத்துதான் பதில் சொல்ல வேண்டும்.

அதே மாதிரி, ஒரு படத்தில் தவறான விஷயங்களை வைக்கும்போது, உண்மை இதுதான் எனக் காட்டுவதற்கு நாம் சரியானப் படத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் இங்கு முஸ்லீம் சமூகத்தில் ‘சினிமா என்றாலே ஹராம்’ என்கிற ஒரு கூற்று மத போதகர்களால் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சினிமா என்பது ஒரு ஒதுக்கப்பட்ட துறையாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், வெகு சிலர் மட்டும்தான் சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு அதற்குப் பதில் சொல்ல முற்படுகிறார்கள்.

ஆனால், பதில் சொல்வதற்கு இஸ்லாமியா சமூகத்திலிருந்து எத்தனை பேர் சினிமாவில் இருக்கிறார்கள்?! ஆனால், சினிமாவில் ஒரு விஷயத்தைத் தவறாகப் போர்ட்ரே பண்ணும்போது, உண்மை என்ன என்பதை எதார்த்தமான சினிமாக்கள் மூலமாகத் தானே நாம் உலகிற்குப் புரிய வைக்க வேண்டும்!” எனக் கேள்விகளை அடுக்கினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed