தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்தத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக தாராபுரம்–உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தீவிரமாக மேற்பாற்வையிட்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் தாராபுரம் தேர்தல் பரப்புரை குறித்து பகிர்ந்த த.வெ.க நிர்வாகிகள், “தலைவர் விஜய் அவர்களைப் பார்க்க எவ்வுளவு பேர் வருவார்கள் என்பதைக் கணிகவே முடியாத சூழல் தான் தொடர்கிறது. பொதுக்கூட்ட திடலில் 10,000 பேர் வரை அமரும் வகையில் வசதிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், முதலமைச்சரின் பலத்த பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு சில திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்க ‘கியூ ஆர்’ குறியீட்டுடன் கூடிய சிறப்பு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி. நேரலைகள் வாயிலாக நிகழ்ச்சியைக் காணலாம். கர்ப்பிணிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் நேரில் வருவதைத் தவிர்க்கவும்” என்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குறித்து காவல்துறை அதிகாரிகள், “சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு கோவை வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பலத்த பாதுகாப்புடன் தாராபுரம் பிரசாரத் திடலை 3 மணிக்கு அடைய இருக்கிறார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கோவை வழியாக இன்று இரவே சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தாராபுரம் பகுதி முழுவது காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட திடல் மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் வழிநெடுகிலும் சுமார் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டத் திடலில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், அவசர சிகிச்சைக்கான மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன” என்றனர்.

























My friends would appreciate a few of these posts and I will be sending links accordingly, and a look at…